Connect with us

Cinema News

தனுஷ் ஒன் மேன் ஷோ!. எபிக் பிளாக்பஸ்டர்!.. கேப்டன் மில்லர் டிவிட்டர் விமர்சனம்…

Captain miller: தனுஷின் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணி காயிதம் என ராவான ஆக்‌ஷன் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கம் என்பதாலும், ஒருபக்கம் நீண்ட தலைமுடி, தாடி என தனுஷுன் தோற்றமும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

எல்லா போஸ்டரிலும் தனுஷ் ஒரு பெரிய துப்பாக்கியை வைத்துக்கொண்டே நின்றதால் இதுவும் ஒரு பக்கா ஆக்‌ஷன் படம் என ரசிகர்களுக்கு புரிந்துபோனது. அதோடு, ஒரு பீரியட் படமும் கூட. தனுஷின் முதல் பீரீயட் படம் இது. எனவே, அவரின் ரசிகர்களிடம் இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில்தான், கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த பலரும் டிவிட்டரில் இப்படம் பற்றி பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: தரமான VFX.. கண்டிப்பா இது அயலான் பொங்கல்தான்!.. டிவிட்டர் விமர்சனம்…

1930ல் நடக்கும் கதையை அருண்மாதேஸ்வரன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். அவரின் கடும் உழைப்பு இப்படத்தில் தெரிகிறது. வழக்கம்போல் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல், பிரியங்கா மோகனும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்’ என வினியோகஸ்தர் தனஞ்செயன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

twitt

இது தனுஷின் ஒன் மேன் ஷோ. அவருடைய சிறப்பான நடிப்பை காட்டியிருக்கிறார். இடைவேளை மற்றும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கிறது. அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்கள் போல இது வேகமாக இல்லை. சந்தீப் கிருஷ்ணனும், சிவ்ராஜ்குமாரும் அவர்களின் கேமியோ வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

twitt

ஜிவி பிரகாஷின் இசை மற்றும் படத்தின் உருவக்கம் சிறப்பாக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டு ஐந்துக்கு 3.5 மதிப்பெண்களை கொடுத்திருக்கிறார் சிலரோ கேப்டன் மில்லர் ஒரு எபிக் பிளாக் பஸ்டர் திரைப்படமாக இருக்கும் எனவும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனாலும், அனைத்து ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்குமா, இது ஒரு வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top