அயலான் படத்தினை விஜயகாந்த் ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாதாம்!… என்ன நடந்துச்சு தெரியுமா?

Published on: January 12, 2024
---Advertisement---

Ayalan: தமிழ் சினிமாவில் ஒரு படம் பல வருடத்தினை தாண்டினாலே ரிலீஸ் ஆவது என்னவோ சந்தேகம் தான். ஆனால் தான் நடித்த ஒரு படத்தினை வெளியிட ஹீரோவாக சிவகார்த்திகேயன் கொடுத்த அர்ப்பணிப்பை சொல்லியே ஆக வேண்டும்.

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் ஆர். டி. ராஜா, கோட்டபாடி ஜே. ராஜேஷ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு செய்து இருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்திருந்தார். இஷா கோபிகர் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்.

இதையும் படிங்க… தனுஷ் ஒன் மேன் ஷோ!. எபிக் பிளாக்பஸ்டர்!.. கேப்டன் மில்லர் டிவிட்டர் விமர்சனம்…

இப்படத்தில் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்து இருக்கிறார். 2018ம் ஆண்டு இப்படி ஒரு படத்தினை எடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் நாட்கள் ஆக ஆக விஎஃப்எக்ஸுக்கு எக்கசக்க செலவுகள் இழுப்பதால் தன்னுடைய சம்பளத்தையே வேண்டாம் எனக் கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன். 2020ல் இப்படத்திற்கு அயலான் என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தின் ஏலியனுக்காக கிட்டத்தட்ட 7 வருடமாக ரவிகுமார் உழைத்தாராம்.

முழுக்க முழுக்க இது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டும் உள்ளது. இப்படத்தில் 4500 ஷாட்டுகள் விஎஃப்எக்ஸில் உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் தான் படத்தின் ரிலீஸும் இத்தனை வருடம் தள்ளிப்போனதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க… லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என சிவகார்த்திகேயன் மீது இருந்த வெறுப்பை மீறி அவர் செய்து இருக்கும் இந்த விஷயம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.