அந்த படத்தில் என் கேரக்டரை பார்த்து தலையில அடிச்சுக்கிட்டாரு! கணவர் குறித்து லைலா சொன்ன சீக்ரெட்

Published on: January 12, 2024
laila
---Advertisement---

Actress Laila: தமிழ் சினிமாவில் கன்னக் குழி அழகி என பேர் வாங்கிய நடிகை லைலா. எப்பொழுது சிரித்த முகத்துடன் இருக்கும் லைலா ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்த நடிகையாகவே காணப்படுகிறார். கிட்டத்தட்ட தமிழில் அனைத்து முக்கியமான நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.

தற்போது விஜயின் தளபதி 68 படத்திலும் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட லைலா சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னையும் குஷ்பூவையும் அப்படி பேசாதீங்க! கஸ்தூரி ராஜாவுக்கு இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக வதந்தி என்ற வெப்சீரிஸில் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரமாகவே லைலாவை செதுக்கியிருப்பார்கள். அவர் நடித்த ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களை கவரும் விதமாகவே அமைந்திருந்தன.

தில், தீனா, பிதாமகன், பார்த்தேன் ரசித்தேன் போன்ற வெற்றிப்படங்களிலேயே பெரும்பாலும் பயணித்திருக்கிறார். குறிப்பாக பிதாமகன் படத்தில் காமெடி காட்சியில் மற்ற நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இதையும் படிங்க: உங்கள விட சிறப்பா நான் பாட போறதில்ல.. பாட மறுத்த யேசுதாஸ்!.. மனதை உருக்கும் அந்த பாட்டா?!..

இந்த நிலையில் அவர் படங்களை அவரது கணவர் பார்த்து எதுவும் சொன்னாரா? அல்லது ஏதாவது அறிவுரை கொடுப்பாரா? என கேட்கப்பட்டது. அதற்கு லைலா ‘ஆமாம். சொல்லியிருக்கிறார். பிதாமகன் படத்தை பார்த்து அவர் தலையில அடிச்சுக்கிட்டாரு’ என சொல்லி சிரித்தார் லைலா.

அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவுக்கு பேசப்பட்டிருக்காது. எந்தவொரு ஸ்டேட்டஸும் பார்க்காமல் இறங்கி நடித்திருப்பார் லைலா.

இதையும் படிங்க: நீ எல்லாம் ஒன்னுமே இல்ல.. சீரியல் ஹீரோவால் அசிங்கப்பட்ட விஷ்ணு!… இதுக்காகதான் பிக்பாஸ் எண்ட்ரியாம்!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.