ரஜினி விஷயத்துல அவர் பண்ணது வேறலெவல்!.. அப்பவே ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்த சிவகார்த்திகேயன்..

Published on: January 13, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் ஆங்கராக வேலை பார்த்து வந்த சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு திறமையாக இருந்தது மிமிக்ரி. ஒரு சில நடிகர்களின் வாய்ஸை எடுத்து அப்படியே செய்து காட்டுவார்.

அப்படியே மிமிக்ரி , டான்ஸ், தொகுப்பாளர் என வளர்ந்து பிரபலமாகி வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார். இப்போது அவரின் வளர்ச்சி அபார வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் அஜித், விஜய் போன்றவர்களை போல் ஒரு அந்தஸ்து பெற்ற நடிகராக மாறியிருக்கிறார்.

இதையும் படிங்க: என் கெரியருக்கு எண்ட் கார்டு போட்டாரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோதிகா

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் தன் திறமைகளை ஒவ்வொன்றாக வளர்ந்து வருகிறார்.  தற்போது அவரின் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. தனுஷ் நடித்த கேப்டன்  மில்லர், அருண்விஜய் நடித்த மிஸன் போன்ற படங்களோடு அயலான் படம் வெளியாகியிருக்கிறது.

படம் வெளியாகி பாஸிட்டிவ் கமெண்ட்களையே பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அதன் பிறகு ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..

இந்த நிலையில் பிரபல காமெடி  நடிகர் சௌந்தர் சிவகார்த்திகேயனை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். இவர் வடிவேலுவுடன் தராசு காமெடியில் மளிகை கடை வியாபாரியாக நடித்திருப்பார். நடிகர் சௌந்தரும் ஒரு நல்ல மிமிக்ரி கலைஞர். பெரும்பாலான நடிகர்களின் வாய்ஸை எடுத்து அப்படியே பேசிக் காட்டுபவர்.

soundar

ரஜினியின் வாய்ஸை தத்ரூபமாக பேசிக் காட்டினார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன்தான்  என்று கூறினார். ஏனெனில் பல மிமிக்ரி கலைஞர்கள் ரஜினியின் அவர் நடித்த படங்களின் டையலாக்கை எடுத்து பேசி மிமிக்ரி செய்வார்களாம். ஆனால் சிவகார்த்திகேயன் மட்டும் ரஜினி மேடையில் பேசிய விஷயங்களை வைத்து மிமிக்ரி செய்வாராம். அது ரஜினி பேசியதைப் போல இருக்குமாம். படத்தில் பேசியதை வைத்து மிமிக்ரி செய்தால் செயற்கைத்தனமாக இருக்குமாம். அதனால்தான் சிவகார்த்திகேயன் வழியை பின்பற்றி மிமிக்ரி செய்கிறேன் என சௌந்தர் கூறினார்.

இதையும் படிங்க : பழம்பெரும் நடிகரின் குடும்ப வாரிசு! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.