பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய தனுஷ்!.. கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

Published on: January 13, 2024
---Advertisement---

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளின் வெளியான கேப்டன் வின்னர் திரைப்படம் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.

இதையும் படிங்க: ரஜினி விஷயத்துல அவர் பண்ணது வேறலெவல்!.. அப்பவே ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்த சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போர் படத்தை இதுவரை எந்த ஒரு இயக்கங்களும் உருவாக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு படம் ஆரம்பித்ததில் தொடங்கி முடியும் வரை போர் காட்சிகளையும், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் காட்சிப்படுத்தி இயக்குனர் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார். ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை தனுஷ் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் மாஸ் எலிவேஷனை கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கேப்டன் மில்லர் வெளியானது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக 1500 திரையரங்குகளில் வெளியான இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் உலக முழுவதும் இந்த படம் அதிகபட்சமாக 17 கோடி ரூபாய் வசூல் அள்ளி இருப்பதாகவும் நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது என்றும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கை இல்லாத ஜாக்கெட்டு கண்ண கட்டுது!.. கட்டழகில் அசர வைக்கும் அதிதி ஷங்கர்…

முதல் நாளிலே படம் வெற்றி பெற்று விட்டதாக சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுசுக்கு மிகப்பெரிய மாலையை அணிவித்து கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த பொங்கல் தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் தான் என அந்தப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.