Cinema News
நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…
Vijayakanth: விஜயகாந்த் படங்கள் என்றாலே சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும்… காலை தூக்கி சுவற்றில் வைத்து பின் ரவுடிகளை உதைத்து வெளுப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். துவக்கம் முதலே ஒரு Angry young man கதாபாத்திரங்களில்தான் விஜயகாந்த் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் அதுவே அவரின் அடையாளமாகவும் மாறிவிட்டது.
விஜயகாந்த் என்றாலே கோபமாக முறைத்து அனல் பறக்கும் வசனங்கள் பேசுவார். அதிரடி சண்டை காட்சிகளில் நடிப்பார் என்பதால் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களில் அது போன்ற காட்சிகளையே இயக்குனர் அதிகம் வைத்தார்கள். தமிழ் சினிமாவில் ஃபார்முலாவேஅதுதான். ஒரு நடிகர் ஒரு மாதிரி நடித்து படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அதேமாதிரி கதைகளிலேயே அந்த நடிகரை நடிக்க வைப்பார்கள்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…
ஆனால், அதிக வசனங்கள் பேசாமல், மிகவும் மெதுவான குரலில் அமைதியாக விஜயகாந்த் பேசி நடித்து பல படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது ஊமை விழிகள், செந்தூரப்பூவே, வைதேகி காத்திருந்தாள், என் ஆசை மச்சான் என பல படங்களை சொல்லலாம். ஒரு இயக்குனர் நினைத்தால் ஒரு ஹீரோவின் இமேஜை மாற்ற முடியும். பரபர ஆக்ஷன் ஹீரோவாக இருந்த விஜயகாந்தின் இமேஜை ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் மூலம் மாற்றியவர் ஆர்.சுந்தரராஜன்.
அதன்பின்தான் விஜயகாந்தை இப்படியும் நடிக்க வைக்க முடியும் என பல இயக்குனர்கள் நினைத்தார்கள். இதுபற்றி 30 வருடங்களுக்கு முன்பே பேட்டி கொடுத்த விஜயாகாந்த் ‘சண்டை காட்சி என்றால் எல்லோரும் சுலபமாக நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் மிகவும் கடினம். ஒரு சண்டை காட்சியில் நடித்தால் 3 நாளைக்கு உடம்பு வலிக்கும். அதேபோல், என்னை எல்லோரும் அப்படியே பார்த்தபோது ஆர்.சுந்தர்ராஜான் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வேறுமாதிரி நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…
அதேபோல், எனக்கு நகைச்சுவை காட்சிகளில் நடிக்கவராது என எல்லோரும் நினைத்தபோது கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் எனது நண்பர் லியாகத் அலிகான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு விஜயகாந்தை வைத்து காமெடி கொடுக்க முடியும் என நிரூபித்த திரைப்படம்தான் ‘பாட்டுக்கொரு தலைவன்’. யாருமே நம்பாதபோது அவர் என்னை நம்பினார். சில திரைப்படங்களில் நான் காமெடி காட்சிகளில் நடித்ததற்கு அவர்தான் காரணம் என விஜயகாந்த் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.