Connect with us

Bigg Boss

பைனல் ஸ்டேஜ் ஏறப்போகும் போட்டியாளர்கள்!.. பிபி டீம் செஞ்சத பாத்தீங்களா?

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7 பைனல் இன்று நடந்து வரும் நிலையில் ரசிகர்கள் யார் வின்னராக இருப்பார்கள் என தீவிரமாக காத்திருக்கின்றனர். இதில் பிபி டீம் எந்த ஒரு குளறுபடியும் செய்யாமல் இருந்தாலே போதும் என்பதும் பலரின் கருத்தாக இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த சீசன் மத்த சீசன்களை ஒப்பிடும் போது பிளாப் என்றே கருதப்படுகிறது. எந்த வித டாஸ்கும் இல்லாமல் பெரிய பரபரப்பு இல்லாமல் கிசுகிசு பேசியே காலத்தை ஓட்டினர். அதிலும் கண்டெண்ட் கொடுத்த போட்டியாளர்கள் கில்லாடி என்பது உண்மை தான்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..

சீசன் தொடக்கத்தில் அதிகம் ஈர்க்கப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. ஆனால் 32 நாளிலே அவரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா, பூர்ணிமா, நிக்சன், அக்‌ஷயா, விக்ரம், ரவீனா, மணி, விஷ்ணு ஆகியோர் உரிமைக்குரல் தூக்க பிரச்னை பத்திக்கொண்டது. ஒரு கட்டத்தில் போட்டியாளர் சொல்லியே பிரதீப்புக்கு ரெட் கார்ட் தரப்பட்டதாக கமல் பழியை அவர்கள் மீதே போட்டார்.

இப்படி ஒன்னு சீசன் 1ல் நடந்த ஓவியா தான வெளியில போய் இருப்பாங்க. லாஜிக்கா யோசிச்சிருக்கலாமே. சரி அது முடிஞ்ச கதை தான். இருந்தும் பழைய சீசன் போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை இந்த சீசனை வறுத்தெடுத்தனர். இதில் கமல்ஹாசன் வரை அதிகம் கலாய் மெட்டிரியலாக மாற்றப்பட்டார்.

பிபி டீமுக்கே இது பெரிய தர்மசங்கடத்தை கொடுத்து இருக்க வேண்டும். கிட்டத்தட்ட பைனல் வாரத்தில் அந்த சீசன்களின் தொகுப்பு பல எமோஷன்களில் போட்டியாளர்களுக்கு போட்டுக்காட்டப்படும். அப்படி எமோஷனல் பிரிவில் காட்டப்பட்ட வீடியோவில் பிரதீப்பின் காட்சிகளும் இருக்கிறது.

இதையும் படிங்க: கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் அயலான்!.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?!..

மக்கள் நினைச்சிட்டா யாரு மாத்துறது. நிகழ்ச்சியில் சம்மந்தமே இல்லாதவர் பிஆர் வைக்க வாய்ப்பே இல்ல. அதனால் இது கவினுக்கு கிடைத்த ஆதரவு போல பிரதீப்புக்கும் ரசிகர்களின் ஆதரவாகவே கருதப்படுகிறது. அவருக்கு சப்போர்ட் செய்த அர்ச்சனா கப்பை தட்ட வேண்டும் என்பதே பலரின் ஒருமித்த கருத்தாகி இருக்கிறது.
பிரதீப்புக்கான வீடியோவைக்காண: https://twitter.com/MSimath/status/1746103786580713807
Continue Reading

More in Bigg Boss

To Top