Cinema History
கரண் மார்க்கெட்டை இழந்தது ஏன்னு தெரியுமா? பின்னணியில் இத்தனை விஷயங்களா?
நடிக்கும்போது கண்களால் பேசுபவர்கள் ஒரு சில நடிகர்கள் தான் உண்டு. அவர்களைப் பார்த்தாலே ரொம்பவும் திறமை வெளிப்படும். அவர்களது நடிப்பும் வெகு சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் கரண். அவர் 90களில் தமிழ்சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்தார். அதன்பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது ஏன் என்று பார்க்கலாமா…
நடிகர் கரண் எப்போதுமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர். இவர் சில சமயங்களில் ஹீரோவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார். நம்மவர் படத்தில் அப்படிப்பட்ட நடிப்பு தான். கமலுக்கு வில்லனாக வந்து அசத்தியவர் கரண். இவரது நடிப்பு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.
அதே போல அஜீத் நடித்த படங்களிலும் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். ஒரு காலத்தில் இவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது தனக்கு எந்த கேரக்டர் வந்தாலும் ஓகே சொல்லிவிடுவாராம். அந்தக் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்று கூட பார்க்காமல் ஓகே சொல்வாராம். விஜய், அஜீத், கார்த்திக், முரளி படங்களில் 2வது கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார். அதே போல வில்லனாகவும் நடித்துள்ளார்.
சொல்லாமலே படத்தில் லிவிங்ஸ்டன் தான் ஹீரோ. அவருக்காக இந்தப் படத்தில் 2வது கதாநாயகனாக கரண் நடிக்க சம்மதித்தார். அவருக்கு எப்போதும் வருமானம் வந்து கொண்டே இருந்தது. ஒரே நேரத்தில் 12 செக் வரை டெபாசிட் செய்வாராம்.
2000களின் ஆரம்பத்தில் அவர் அஜீத், விஜய் ஆகியோரை விட உடல் எடையை அதிகரித்து விட்டார். கரண் 9 படங்கள் வரை கதாநாயகனாகவே நடித்துப் பார்த்தார். அதில் சம்பாதித்த பணம் முழுவதையும் இழந்து நஷ்டமானார். அந்த வகையில் விவேக் ஒரு சமயம் அவரது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவரது படங்களில் சம்பளம் இல்லாமல் நடித்தார்.
சத்யராஜூம் கரணின் சூழ்நிலையால் சம்பளம் வாங்காமலே நடித்தார். அவர் திரும்பவும் பீல்டுக்குள் வருவதற்குள் வயதாகி விட்டது. அவர் தேர்ந்தெடுத்த கதைகளும் சொல்லும்படியாக இல்லை. இதனால் தான் மிகவும் திறமைவாய்ந்த நடிகரான கரண் தனது மார்க்கெட்டைத் தக்க வைக்க முடியாமல் பீல்டு அவுட் ஆனார்.