கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இவர் வந்தார்! ‘கேப்டன் மில்லரை’ காப்பாற்றிய ஒரு கேரக்டர்

Published on: January 14, 2024
dhanush
---Advertisement---

Captain Miller: ஒவ்வொரு வருடமும் தல பொங்கல்,தளபதி பொங்கல் என கொண்டாடி வந்ததை ஒட்டி இன்று முதன் முறையாக தனுஷ் பொங்கலை ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். அந்தளவுக்கு கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். படத்தின் கதைப்படி கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காத போது தனுஷ்தான் அவர்களை கோயில் கருவறைக்குள்ளேயே கொண்டு செல்கிறார்.

இதையும் படிங்க: ஆளவிடுங்கடா சாமி!.. நான் பிக் பாஸ் பார்க்குறதே இல்லை!.. தெறித்து ஓடிய எக்ஸ் பிக் பாஸ் போட்டியாளர்!..

இது சம்பந்தமாக பிரிட்டிஷ்காரர்களிடம் சண்டை போடும் மாதிரியான காட்சியமைப்பில் படம் அமைந்திருக்கிறது. படத்திற்கு கூடுதல் ப்ளஸாக இருப்பது ஜிவி பிரகாஷ் குமாரின் இசை. ஒவ்வொரு ஃபிரேமிலும் தனுஷை மாஸாக காட்டியிருக்கிறார் அருண்மாதேஸ்வரன்.

தமிழ் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகி முதல் நாள் வசூலிலேயே சுமார் 14 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டது. கேப்டன் மில்லர் திரைப்படம் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தோடு மோதினாலும் தனுஷுக்குத்தான் பெரிய ஓப்பனிங் என்று சொல்லப்படுகிறது.

captain
captain

இதையும் படிங்க: கரண் மார்க்கெட்டை இழந்தது ஏன்னு தெரியுமா? பின்னணியில் இத்தனை விஷயங்களா?

இந்த நிலையில் இதுவரை யாருமே பார்த்திராத ஒரு கேரக்டர் அந்தப் படத்தில் அமைந்திருக்கிறது. அதாவது போர் வெடிக்கும் சமயத்தில் நல்ல கரு நிறத்துடன் ஒருவர் துப்பாக்கியை வைத்து சுடும் மாதிரியான காட்சி இருக்கும். அந்த கேரக்டருக்கு முதலில்  பிரபலமான நடிகர் ஒருவரைத்தான் நடிக்க வைத்திருந்தார்களாம்.

ஆனால் பாதியிலேயே அந்த நடிகர் செட்டை விட்டு கிளம்பிவிட என்ன செய்வதென்று திகைத்து நின்றிருக்கிறார்கள். அதன் பிறகு அருண் மாதேஸ்வரன் கண்ணில் ஸ்டண்ட் கலைஞர் கணேஷ் என்பவர் கண்ணில் பட அவரை வைத்து அந்த கேரக்டரில்  நடிக்க வைத்திருக்கிறார்.  அந்த நடிகரே நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் இவ்வளவு பெரிதாக பேசியிருக்காது. தக்க சமயத்தில் அந்த ஸ்டண்ட் கலைஞர் கண்ணில் தோன்றினார் என அருண்  மாதேஸ்வரன் கூறினார்.

இதையும் படிங்க: ஓ நோ!.. சட்டை பட்டனை கழட்டி ஒல்லி பெல்லியை காட்டிய நாகினி நடிகை!.. ஓவர் ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.