58 வயசு நடிகருடன் ஜோடியா நடிக்க மகளை தயார்ப்படுத்தும் தேவயாணி குடும்பம்?.. கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!..

Published on: January 15, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சியான் விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தேவயாணி. இயக்குநர் ராஜகுமரனை திருமணம் செய்துக் கொண்ட இவர் இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்களை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். அந்த இரு குழந்தைகளும் தற்போது வளர்ந்து இளம் பெண்களாகி விட்டனர்.

மூத்த மகளை தமிழ் சினிமாவில் தன்னைப் போலவே பெரிய ஹீரோயினாக்க வேண்டும் என வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை எப்படி தயார்ப்படுத்தி வருகிறாரோ அதே போல தேவயாணி மற்றும் ராஜகுமரன் இருவருமே தங்கள் மூத்த மகளை ஹீரோயினாக்க முயற்சித்து வருகின்றனர் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளனர்.

இதையும் படிங்க: பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் நடந்த ரகளை!.. கடுப்பான வனிதா.. அக்காவ் கண்ணாடி எங்க?

தேவயாணியின் கணவர் ராஜகுமரன் தனது மூத்த மகள் தீவிர ஷாருக்கான் ரசிகை என்றும் முதல் நாளிலேயே ஷாருக்கான் படத்தை பார்த்து விடுவார் என்றும் அவருக்கு ஜோடியாகத்தான் இவர் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஷாருக்கானுக்கு ஜோடியாக தேவயாணி பொண்ணா என ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், 18 வயது பெண்ணை 58 வயது நடிகருக்கு ஜோடியாக்கினால் நல்லாவா இருக்கும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அசோகனை செல்லமாக அழைத்த எம்.ஜி.ஆர்!… பதறி போய் காலை பிடித்து கதறிய சம்பவம்…

சமீபத்தில், விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கும் போது அதில், சியான் விக்ரமுக்கு நடிக்கவே வரவில்லை என்றும் இப்போது வரை அவர் ஒரு நல்ல நடிகரே இல்லை என ராஜகுமரன் பேசியது சினிமா உலகத்தில் சர்ச்சையை கிளப்பியது. அந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தேவயாணி நடித்திருப்பார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.