Cinema History
கமல் ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…
Kamalhaasan: நடிகர் கமலுக்கு சினிமா மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னை ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் அழைத்து சென்றவர் அவரை அறிமுகம் செய்துவைக்கவில்லை என 5 வயதிலேயே கோபித்துகொண்டவர்தான் அவர். அதோடு, களத்தூர் கண்ணம்மா படப்பிடிப்பு நடக்கும்போது ஏவிஎம் பிரிவ்யூ தியேட்டரில் ஆங்கில படங்களை பார்த்து அதுபோலவே நடித்துக்காட்டுவாராம்.
நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தபோது படப்பிடிப்பு முடிந்தவுடன் எல்லோரும் ஊர் சுற்ற போய்விட்டால் கமல்ஹாசன் மட்டும் எதாவது தியேட்டருக்கு போய் ஆங்கில படங்களை பார்த்துக்கொண்டிருப்பாராம். கமலை பொறுத்தவரை அவருக்கு எல்லாமே சினிமாதான்.
இதையும் படிங்க: சூர்யா மட்டுமில்ல.. கமலிடம் வாட்ச் கிப்ட் வாங்கிய வேற 3 நடிகர்கள் இருக்காங்க!.. வாங்க பார்ப்போம்…
அதற்காக கடுமையாக உழைத்து தன்னை தகுதியானவராகவும் கமல் மாற்றிக்கொண்டார். அதோடு, தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும் என்கிற ஆசையும் கமலுக்கு இருக்கிறது. இதற்காக பல பரிசோதனை முயற்சிகளை கமல் செய்து பார்த்திருக்கிறார். பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, தசாவதாரம் என பல படங்களை சொல்லலாம்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கதையின் டைரி ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் எப்போதும் இருக்கும். சமீபத்தில் கமலை பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாரதிராஜா அவரை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: டி.ஆர்.பி-யில் டாப்பில் இருக்கும் 5 சீரியல்கள்!.. நீச்சல் அடிக்க முடியாம தவிக்கும் எதிர்நீச்சல்
நான் உதவி இயக்குனராக இருக்கும்போது கமல் எனக்கு பழக்கம். அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வோம். ‘சபையில் நான் நடந்தால் எல்லோரின் பார்வையும் என் மீது இருக்க வேண்டும். அந்த இடத்தை அடைவதுதான் என் லட்சியம்’ என என்னிடம் அடிக்கடி சொல்லுவான். அதை நிரூபித்தும் காட்டினான்.
அதற்காக கடுமையாக உழைத்தான். ஒருநாள் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்தான். நான்தான் அவனை வீட்டில் கொண்டுபோய் விட்டேன். ஒருநாள் ‘பதினாறு வயதினிலே’ படத்தில் நடிக்க முடியுமா எனக்கேட்டேன். அவரின் அண்ணன் சாருஹாசனிடம் கதை சொல்ல சொன்னான். அவருக்கு பிடித்துவிட்டது. கமலுடம் நடிக்க சம்மதித்தான். என்னிடம் அவன் கதையே கேட்கவில்லை. படப்பிடிப்பில் சப்பாணி எப்படி இருப்பானோ அப்படி தன்னை மாற்றிக்கொண்டு நடித்தான். எனக்கு நண்பனகாவும் மாறிப்போனான். அவன் ஒரு மகா கலைஞன்’ என பாரதிராஜா கூறினார்.
இதையும் படிங்க: நடிகைக்கு நள்ளிரவில் கால் செய்து அழைத்த தனுஷ்!… விவாகாரத்து செய்து துரத்திய கணவர்!…