Cinema News
தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் நெப்போடிசம்!.. ஆர்ஜே பாலாஜிக்கே இந்த நிலைமையா?..
பாலிவுட் சினிமாவில் மட்டுமின்றி டோலிவுட், கோலிவுட் என எல்லா இடங்களிலும் நெப்போடிசம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது என ஆர்ஜே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் நுழைவதற்கு பெயர் நெப்போடிசம் இல்லை. அப்படி நுழையும் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுவதும் மற்றவர்களை ஒதுக்கி இண்டஸ்ட்ரியை விட்டே ஓட வைப்பதும் தான் நெப்போடிசம்.
நானும் ரவுடி தான் உள்ளிட்ட சில படங்களில் காமெடியனாக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் அடுத்து சிங்கப்பூர் சலூன் படம் விரைவில் வெளியாகிறது.
இதையும் படிங்க: தனுஷை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்தியேன்!.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அயலான் டீம்!
இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பாலிவுட்டில் மட்டுமில்லை தெலுங்கு சினிமாவிலும் ஏன் தமிழ் சினிமாவில் கூட நெப்போடிசம் உள்ளது எனக் கூறியுள்ளார்.
எல்கேஜி படத்தில் நான் நடிக்கும் போது, அவன் சும்மாவே ஓவரா பேசுவான், அவனை ஏன் சார் ஹீரோவா ஆக்குறீங்க என என்னோட தயாரிப்பாளருக்கு பிரபல தயாரிப்பாளரின் மகனும் ஹீரோவுமான நடிகர் போன் செய்து பேசியிருக்கிறார் என ஷாக்கை கிளப்பி உள்ளார்.
இதையும் படிங்க: நடிகைக்கு நள்ளிரவில் கால் செய்து அழைத்த தனுஷ்!… விவாகாரத்து செய்து துரத்திய கணவர்!…
மேலும், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் இப்போ நான் என ஒவ்வொரு முறையும் எந்தவொரு பின்புலமும் இல்லாதவங்களும் இங்கே நடிச்சிட்டுத் தான் இருக்கோம் என்றும் பாசிட்டிவாக பேசியுள்ளார்.
சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஹீரோயினாக மீனாக்ஷி செளத்ரி நடித்துள்ளார். அவர் தான் அடுத்து விஜய்யின் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.