Cinema History
இதனாலதான் நான் உங்க படத்துல நடிக்கல!. கேள்வி கேட்ட ரஜினியிடம் கேப்டன் சொன்ன நச் பதில்..
ரஜினியும், விஜயகாந்தும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பல நேரங்களில் ரசிகர்கள் நினைப்பதுண்டு. அதற்கு என்ன தான் பதில் என்று பார்ப்போமா…
1985ல் நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள விஜயாகார்டனில் விஜயகாந்த் நடித்துக் கொண்டு இருந்தார். உணவு இடைவேளயின் போது ரஜினி விஜயகாந்தை பிரபல வார இதழுக்காகப் பேட்டி எடுத்தார். அப்போது ரஜினி கேட்ட பல கேள்விகளுக்கும் விஜயகாந்த் மிகவும் நேர்மையாக பதில் சொன்னார்.
இதையும் படிங்க… சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு தூக்கி கொடுத்த பிரபலம்!… இப்படி தான் இந்த விஷயம் நடந்துச்சாம்!
முதல் கேள்வியாக ‘வைதேகி காத்திருந்தாள் படத்தில் முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறீர்கள் அல்லவா?’ என்று கேட்டார். அதற்கு விஜயகாந்த் இல்லை. இதற்கு முன்பே தூரத்து இடி முழக்கம் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளேன். ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தப் படம் வரவேற்பைப் பெரியவில்லை’ என சொன்னார். அடுத்து ‘ என்னை முதன்முதலில் சந்தித்தது நினைவிருக்கிறதா?’ என ரஜினி கேட்டதும், ‘அதை மறக்க முடியுமா? பி.மாதவனின் இயக்கத்தில் வீனஸ் வீடு என்ற படத்தின்போது நாம் சந்தித்தோம்’ என்றார் கேப்டன்.
அப்போதெல்லாம் ரஜினியும், விஜயகாந்தும் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் ரஜினி அதற்கு சம்மதிக்க மாட்டார் என்றும் உதவி இயக்குனர்கள் சொன்னார்களாம். அந்த சந்திப்பில் நான் உங்க கூட இணைந்து நடிக்கவே மாட்டேன்னு சொல்லவே இல்ல என ரஜினி சொன்னதும் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் ரஜினி விஜயகாந்திடம் ‘நீங்களும், நானும் இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு பாயும் புலி படத்தில் கிடைத்தது. ஆனால் ராமன் ஸ்ரீராமன் படத்துல இருந்த கால்ஷீட் பிரச்சனையால நாம ரெண்டு பேரும் இணைந்து நடிக்க முடியாமப் போச்சு. இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?’ன்னு கேட்டார். அதற்கு விஜயகாந்த், அந்த பட வாய்ப்பை இழந்தது பத்தி நான் கொஞ்சம் கூட வருத்தப்படலை.
ஏன்னா நான் தனியாளா சினிமாவுல நிலைச்சி நிற்கணும்னு ஆசைப்பட்டேன். இதனால செகண்ட் ஹீரோ சப்ஜெக்ட்டோ, துணைநடிகராகவோ நடிக்க விருப்பமில்லாமல் தான் இருந்தேன்.
அதை ஆமோதித்த ரஜினி ‘எங்கிட்ட கேட்டபோதும் அதுதான் சொன்னேன். அவர் வளர்ந்து வரும் இளம் ஹீரோ. இப்போதைக்கு துணை நடிகர் சப்ஜெக்டோ, செகண்ட் ஹீரோ சப்ஜெக்டோ அவர் நடிச்சா நல்லாருக்காது’ன்னு சரவணன் சார்கிட்ட சொன்னேன். ஆமா எங்கிட்டயும் சரவணன் சார் சொன்னாரு என்றார் விஜயகாந்த். ஏவிஎம் தயாரித்த முரட்டுக்காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விஜயகாந்துக்கு வாய்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தான் அந்த வில்லன் ரோலில் ஜெய்சங்கர் நடித்தாராம்.