ராஷ்மிகான்னு நம்பி போனா இப்படி ஏமாத்திப்புட்டீங்களேடா!. ஆந்திராவில் அசிங்கப்பட்ட தனுஷ்…

Published on: January 19, 2024
dhanush
---Advertisement---

Actor dhanush: துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிக்க துவங்கிய நடிகர் தனுஷ் இப்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களிலும், மறுபக்கம் பக்கா மசாலா படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர்.

ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தை ராக்கி, சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: காதல் கணவனை விவாகரத்து செய்கிறாரா நமீதா? எல்லாத்துக்கும் காரணம் அந்த தொழிலதிபர்

இப்படத்தை முடித்த கையோடு தனுஷ் தனது 50வது படத்தை இயக்க போனார். தற்போது படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்த படத்திற்கு ராயன் என பெயர் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

dhanush

இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்தவுடன் ஏற்கனவே இயக்கி வந்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் வேலைகளை துவங்கினார். இதில், தனுஷின் அக்கா மகன் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். டி50 படத்தை முடித்தவுடனே தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவிருந்தார்.

இதையும் படிங்க: பல கோடி நஷ்டம் வருமா?!. விக்கியிடம் வசமா சிக்கிய லலித்குமார்!.. கமல் எஸ்கேப் ஆனது சும்மா இல்ல!..

மேலும், தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். அதோடு, நாகார்ஜுனாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், ராஷ்மிகாவின் கால்ஷீட் கிடைக்க தாமதமானதால் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட வேலைகளை துவங்கினார். ஆனால், ‘ராஷ்மிகா கால்ஷீட் கிடைத்துவிட்டது புறப்பட்டு வாங்க’ என ஆந்திராவிலிருந்து அழைப்பு வர அங்கு போனார் தனுஷ்.

rashmika
rashmika

ஆனால், அங்கு போய் பார்த்தால் ராஷ்மிகா இல்லை. நாகார்ஜுனாவோடு அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம். ‘ராஷ்மிகா மந்தனா எங்கப்பா?’ என தனுஷ் கேட்டால் ‘அவங்க அடுத்த மாசம்தான் வராங்க’ என சொல்லியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

இதையும் படிங்க: தம்பி ஓரமா போ!.. சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்த தனுஷ்!.. கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.