Cinema History
சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த சரோஜா தேவி!. டிராப் ஆன திரைப்படம்!..
Sivaji ganesan: திரை உலகை பொறுத்தவரை பல காரணங்களால ஒரு படம் கைவிடப்படும். தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி ஒரு படம் துவங்கப்படும். படப்பிடிப்பில் இயக்குனர் எப்படி காட்சிகளை படம் பிடிக்கிறார் என்பதில் அதிருப்தி ஏற்பட்டால் படம் நிறுத்தப்படும். சில சமயம் இயக்குனர் மாறுவார். சில சமயம் படம் டிராப் ஆகிவிடும்.
சில படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தயாரிப்பாளரால் பணத்தை புரட்டமுடியாமல் படம் நின்று விடும். சில சமயம் அந்த படத்திலிருந்து ஹீரோ விலகி விடுவார். சில சமயம் கதாநாயகி விலகி விடுவார். சில படங்களில் தயாரிப்பாளரிடம் சண்டை போட்டு இயக்குனர் அப்படத்திலிருந்து விலகிவிடுவார்.
இதையும் படிங்க: நாடகத்தில் சிவாஜிக்கு கிடைத்த அந்த வேடம்!. ஆனாலும் ரசித்து செய்து கைத்தட்டலை வாங்கிய நடிகர் திலகம்..
இப்படி ஆரம்பித்த ஒரு திரைப்படம் நின்று போவதற்கு பல காரணங்களை சொல்லலாம். சில சமயம் கதையிலேயே அப்படத்தின் தயாரிப்பாளருக்கு திருப்தி இருக்காது. எனவே, அந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு வேறு கதையை எடுப்பார்கள். இப்படியெல்லாம் பலமுறை தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.
அதேபோல், கால்ஷீட் கொடுத்துவிட்டு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்பு வராமல் போவது என்பது இப்போது இல்லை.. அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது. அப்படி, ஒரு நடிகை படப்பிடிப்புக்கு பல மணி நேரம் வராததால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படம் ஒன்று டிராப் ஆனது பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
இதையும் படிங்க: டாக்டர் சொல்லியும் கேட்காம நடிச்சி ரத்த வாந்தி எடுத்த சிவாஜி!.. டெடிக்கேஷன்னா நடிகர் திலகம்தான்!..
60களில் சிறந்த கதாசிரியராக இருந்த சாண்டில்யன் கதை எழுத கே.சோமு என்பவர் இயக்கிய திரைப்படம்தான் ஜீவ பூமி. ஒருநாள் நடப்பிடிப்பில் சிவாஜி, சரோஜா தேவி நடிக்க ஒரு முக்கியமான காட்சி படமாக்க வேண்டியிருந்தது. காலை 8 மணிக்கெல்லாம் மேக்கப்புடன் தயாராக இருந்தார் சிவாஜி. மதியம் 2 மணி வரை சரோஜா தேவி வரவில்லை.
சிவாஜி கோபப்படவில்லை. ஆனால், இயக்குனர் சோமு படப்பிடிப்பை ரத்து செய்து சிவாஜியை அனுப்பி வைத்தார். அதன்பின் தயாரிப்பாளரிடம் சென்று ‘சரோஜா தேவி படப்பிடிப்புக்கு வராத நிலையில் இந்த படத்தை எப்படி இயக்க முடியும்?’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அன்று சரோஜா தேவி அப்படி நடந்துகொண்டதால் ஜீவபூமி என்கிற திரைக்காவியத்தை ரசிகர்களால் ரசிக்க முடியாமல் போய்விட்டது என்றுதால் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: சிவாஜி படத்தால் கடுப்பான படக்குழு!… அதையே படத்தலைப்பாக்கிய தயாரிப்பு நிறுவனம்!..