கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் ஃபாலோ பண்ண 5 விஷயங்கள்..

Published on: January 20, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவர்தான் விஜயகாந்த். பல இடங்களில் அவமானப்பட்டு சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து சினிமாவில் முன்னேறியவர். துவக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி ஆகிய படங்கள் மூலம் முன்னேறியவர்.

80,90களில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தார். பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் சில கொள்கைகளை கடைசி வரை விஜயகாந்த் கடைபிடித்தார். சினிமாவில் மட்டுமில்லை. நிஜவாழ்விலும் ஒரு கொள்கையோடு வாழ்ந்திருக்கிறார். அப்படி சினிமாவில் அவர் கடைசிவரை கடைப்பிடித்த 5 விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் படிங்க: இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கேப்டன் செய்த செயல்.. கண்ணீர் மல்க கூறிய மகன்

முதலாவதாக தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழி திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்பதில் கடைசி வரை கடைபிடித்தார். பலமுறை வாய்ப்புகள் வந்தும் விஜயகாந்த் அதில் உறுதியாகவே இருந்தார். கமல், ரஜினி போன்ற நடிகர்கள் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் ஒரு படம் கூட அப்படி நடித்தது இல்லை.

இரண்டாவதாக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். நல்லது செய்யும், நல்லதை பேசும், அறிவுரைகளை சொல்லும் ஹீரோ கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்பினார் விஜயகாந்த். கடைசி வரை அதை கடைபிடித்தார்.

இதையும் படிங்க: 2023-ல் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன்கள்!.. கெத்து காட்டிய பஹத் பாசில்…

மூன்றாவது எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். எனக்கு கொடுக்கும் சம்பளத்தை விற்கப்படும் பொருள் மீது வைத்து மக்களிடம் அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, அதை செய்யவே மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

vijayakanth

நான்கவதாக பிளே பாய் வேடத்தில் நடிக்க மாட்டேன், பெண்களை மோசமாக சித்தரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதையும் விஜயகாந்த் கடைபிடித்தார். 5வதாக சம்பளத்திற்காக ஆசைப்பட்டு விஜயகாந்த் எந்த படத்திலும் இதுவரை நடித்தது கிடையாது. சம்பளத்தை பெரிதாக நினைக்காத ஒரே ஹீரோ விஜயகாந்த் மட்டுமே என பல தயாரிப்பாளர்கள் அவரை பற்றி பேசியுள்ளனர். சம்பளமே வாங்காமலும், தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் சம்பளத்தை குறைத்துக்கொண்டும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.