ஹீரோ மட்டும்தான் பழி வாங்கணுமா?.. நாங்களும் செய்வோம்!.. கதாநாயகிகள் இறங்கி நடித்த படங்கள்..

Published on: January 21, 2024
Malini 22-Vadachennai
---Advertisement---

தமிழ்ப்பட உலகில் பெரும்பாலும் கதாநாயகன் தான் பழிக்குப் பழி வாங்குவது போல கதை அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் படத்தில் கதாநாயகியே பழிக்கு பழி வாங்குவது போல் வந்த கதைகள் குறைவு தான். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

அதிரடிப்படை

Athiadipadai
Athiadipadai

1994ல் வெளியான இப்படத்தில் ரோஜா கதாநாயகியாக நடித்துள்ளார். தாய் மீது ஆசிட் வீசி கொலை செய்தவர்களையும், தங்கையை சீரழித்துக் கொன்றவர்களையும் பழிவாங்குகிறாள். இதுதான் கதை. ஆர்.கே.செல்வமணி இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். ரகுமான், ரோஜா, மன்சூர் அலிகான், சுமன், விஜயகுமார், வினுசக்கரவர்த்தி, லட்சுமி, சில்க் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கோவில்பட்டி வீரலட்சுமி

Kovilpatti Veealakshmi
Kovilpatti Veealakshmi

இந்தப் படம் 2003ல் வெளியானது. சிம்ரன் தான் கதாநாயகி. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ராஜேஸ்வர் இயக்கியுள்ளார். தீண்டாமைக்கு எதிராகப் போராடும் பெண்ணின் கதை. கே.ராஜேஸ்வர் எழுதி இயக்கியுள்ளார். சிம்ரன் உடன் சோனு சூட், ஷெரின் உள்பட பலர் நடித்துள்ளனர். தீண்டாமைக்கு எதிராகப் போராடும் பெண்ணின் கதை. ஆதித்யன் இசை அமைத்துள்ளார்.

மாலினி 22 பாளையங்கோட்டை

இந்தப் படம் 2014ல் வெளியானது. தனது வாழ்க்கையை சீரழித்த கயவனையும், அதற்கு உடந்தையாக இருந்த காதலனையும் பழிக்குப் பழி வாங்குகிறாள் கதாநாயகி. இதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தை திரைக்கதை எழுதி இயக்கியவர் ஸ்ரீப்ரியா. நித்யா மேனன், கிரிஷ், சத்தார் உள்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் சங்கர் இசை அமைத்துள்ளார்.

வட சென்னை

வெற்றிமாறன் இந்தப் படம் 2018ல் வெளியானது. தன் அன்பான கணவனைக் கொன்றவனையே மறுமணம் செய்கிறார். அவன் கூடவே இருந்து குழிபறிக்கிறாள். கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் நாயகனை வைத்தே கொல்கிறாள். இது எப்படி இருக்கு? தனுஷ் படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.