கமல் நெப்போலியன் வேஷத்துல நடிச்சாரா? குழப்பிய மா.கா.பா!… ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கலாய் சம்பவம்

Published on: January 20, 2024
---Advertisement---

RJBalaji: தமிழ் சினிமாவில் தற்போது நிறைய ரேடியோ ஜாக்கிகள் புகழ்பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் ஆர்.ஜே.பாலாஜி, மா.கா.பா. ஆனந்த். அப்படி ஒருமுறை ஷோவிலே மா.கா.பா செய்த கலாட்டாவான விஷயத்தினை ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.

விஜய் டிவியில் பிரபல ஆர்.ஜேவாக இருப்பவர் மா.கா.பா. எதையும் கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே உடைத்து அந்த இடத்தினை கலாட்டாவாக மாற்றி விடுவார். அதுபோல தான் ஆர்.ஜே.பாலாஜியும் இவர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை.

இதையும் படிங்க: எவன்டா அடிச்சது!… ராதாரவியும், வாகை சந்திரசேகரும் விஜயகாந்துக்காக செய்த தரமான சம்பவம்!…

ஐபிஎல்லை இவர் கமெண்ட்ரிக்கு பார்க்கும் ரசிகர்களே இங்கு ஏராளம். எல்.கேஜி படத்தின் மூலம் நடிக்க வந்த அவர் தற்போது பிரபல ஹீரோ லிஸ்ட்டிலும் இருக்கிறார். மூக்குத்தி அம்மன், ரன், வீட்டுல விஷேசங்க என இவரின் சமீபத்திய படங்கள் எல்லாமே ஹிட் ரகம் தான்.

அப்படி இருக்க ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகும் இளைஞன் சந்திக்கும் போராட்டங்கள் கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்படத்தின் புரோமோஷனுக்காக ஆர்.ஜே.பாலாஜி நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க:  நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயரை வைக்க மாட்டார்கள்!. எல்லாமே நடிப்பு.. பொங்கும் பிரபலம்..

அப்போது, மாலை அவன் ஷோதான் முதலில் இருந்தது. உள்ளே போன மா.கா.பா தசாவதாரம் படம் சூப்பராக இருந்தது. கமல் எல்லா வேடத்திலும் செமையாக நடித்து இருக்கிறார். எனக்கு அவரின் நெப்போலியன் வேடம் பிடித்ததாக கூறினான். எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவனுக்கு அவ்வளவு தான் திரை அறிவு எனவும் சிரித்து கொண்டே சொன்னார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.