யாரு கர்ப்பமா இருக்காங்கனு தெரியலையே!.. அவர் வேற வயித்த காட்டுறாரு.. அமலா பால் அலப்பறைகள்!..

Published on: January 21, 2024
---Advertisement---

சினிமா வாய்ப்புகள் இழந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அமலா பால். கடந்த நவம்பர் மாதம் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அமலா பால் தற்போது கர்ப்பமாகி உள்ளார்.

மலையாள படமான நீலதாமரா மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2010ம் ஆண்டு ஒரே ஆண்டில் வீரசேகரன், சிந்து சமவெளி மற்றும் மைனா என தமிழில் ஹாட்ரிக் அடித்தார்.

Also Read

இதையும் படிங்க: சுத்தமா தேதியே இல்ல! படத்தின் கதையை கேட்டதும் உதறித்தள்ளிய சிம்ரன் – என்னப் படம் தெரியுமா

மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய ஏ.எல். விஜய்யுடன் காதல் கொண்டார் அமலா பால். சியான் விக்ரம், அனுஷ்கா நடித்த தெய்வத் திருமகள் படத்தில் நடித்த அமலா பாலுக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும் இடையே ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பாலை நடிக்க வைத்து இருந்தார் ஏ.எல். விஜய்.

ஆடை படத்துக்குப் பிறகு சினிமாவில் அமலா பாலுக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன. ஆடையே அணியாமல் பல நாட்கள் ஒரு பெரிய ஆண்கள் டீம் வேலை பார்க்க தைரியமாக அமலா பால் நடித்தாலும் இனிமேல் குடும்ப ஹீரோயின் கிடையாது என முத்திரை குத்தப்பட்ட நிலையில், தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு நடிக்கத் தொடங்கினார்.

இதையும் படிங்க: கோட் விஜய்யை விடுங்க!.. அஜித் எவ்ளோ யங்கா மாறிட்டாரு பாருங்க!.. விடாமுயற்சி டீமோட செம பிக்ஸ்!..

கல்யாணமான 2 மாதத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு அறிவித்தர் அமலா பால் தொடர்ந்து தனது கணவருடன் பேபி பம்ப் போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார். சட்டை பட்டனை எல்லாம் கழட்டி விட்டு ராஜ் தேசாய் தனது தொப்பை வயிற்றை காட்டிக் கொண்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் இதில், யார் கர்ப்பம் என கிண்டல் செய்து வருகின்றனர்.