Connect with us

Cinema News

சிவகார்த்திகேயன் போல சிங்கராக மாறிய சந்தானம்!.. வாய்ஸ் சகிக்கல என கலாய்க்கும் நெட்டிசன்கள்!..

சினிமா ஹீரோக்கள் பாட்டு பாடுவது, பாடல் எழுதுவது என தங்கள் படங்களில் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியை எல்லாம் செய்து அசத்தி வருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வாய்ஸ் கொடுத்து பாடியே தீருவேன் என முடிவெடுத்த நிலையில், ஷான் ரோல்டன் இசையில் முதன் முதலாக பாடியிருக்கிறார்.

ஆப்ராக்கா டாப்ரா என மேஜிக்கல் வார்த்தையாக லிரிக்ஸ் இருக்கும் என்று பார்த்தால் ஆரம்பத்திலேயே சந்தானம் குரலில் ஆபாச வார்த்தையாகவே வந்து விழுகிறது.  சிவகார்த்திகேயன் பாடகராகவும் பாடலாசிரியராகவும் மாறிய நிலையில், சந்தானமும் இந்த முயற்சியை எடுத்து இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுகிறது.

இதையும் படிங்க: ஹீரோ, வில்லன், குணச்சித்திம்… எல்லாவற்றிலும் கலக்கிய நாசர்.. மறக்கமுடியாத பாகுபலி..

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் கடவுளின் பெயரை சொல்லி ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் ராமசாமியாக சந்தானம் நடித்திருக்கிறார் என்பது இந்த பாடலை கேட்டாலே புரிந்து விடுகிறது. முடிந்த வரை முயற்சி செய்து நல்லாவே பாடியிருக்கிறார் சந்தானம். சில இடங்களில் மற்றவர்கள் அதை மேட்ச் செய்து விடுகின்றனர். சில இடங்களில் அதிக இசையை போட்டு ஷான் ரோல்டனே பேட்ச் ஒர்க் செய்திருக்கிறார்.

இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் ரொம்ப பழைய பாட்டு மாதிரி இருக்கு என்றும் சந்தானம் வாய்ஸ் கொஞ்சம் கூட செட்டே ஆகவில்லை என்றும் இதற்கு மேல் இந்த ரிஸ்க்கை எடுக்க வேண்டாம் தல தளபதி என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வாயோடு வாய்.. எப்படியெல்லாம் ஊட்டி விடுறாரு? வீடியோவை வெளியிட்டு மஜா பண்ணும் நிக்கிகல்ரானி

கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் யுவன் சங்கர் ராஜா “பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்” பாடல் ரீமிக்ஸ் போட்டு வேறலெவல் ஹிட் கொடுத்திருப்பார். ஆனால், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளே இப்படி இருந்தால் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகும் படத்தில் மற்ற பாடல்களின் நிலை என்ன என கேட்டு வருகின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top