ஷகீலா முழு போதையில் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்க!… வளர்ப்பு மகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

Published on: January 22, 2024
---Advertisement---

Shakeela: நடிகை ஷகீலா குக் வித் கோமாளிக்கு பின்னர் பெருவாரியான மக்களிடம் நல்ல பெயரை சம்பாரித்து வைத்தார். ஆனால் அது சமீபத்திய காலமாக சுக்குநூறாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதன் ஒரு பகுதியாக அவர் மீது அண்ணன் மகள் சொல்லி இருக்கும் சில குற்றச்சாட்டுகள் தான்.

குக் வித் கோமாளி புகழுக்கு பின்னர் கொஞ்சம் சர்ச்சையான பேட்டிகளை தனியார் சேனலில் எடுத்து வருகிறார். இவர் சில திருநங்கைகளை வளர்ப்பு பெண்களாக தன்னுடன் வைத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவரின் சொந்த அண்ணன் மகள்களை வளர்த்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமியின் அடுத்த மகா சங்கமம் ஆரம்பம்!… எத்தன தடவை?

இந்நிலையில் சமீபத்தில் ஷகீலா தன்னுடைய அண்ணன் மகள் தன்னை கொடூரமாக தாக்கியதாக புகார் கொடுத்து இருந்தார். இந்த தகவல் பரபரப்பான நிலையில் ஷீத்தல் என்ற அந்த பெண்ணை நேரில் அழைத்து விசாரித்தனர். அவர் செய்தியாளர்களை சந்தித்த போது சில அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பேட்டியில் இருந்து, நான் அவரை முதலில் அடிக்கவெல்லாம் இல்லை. ஆறுமாதத்தில் இருந்து அவர்களை எங்களை வளர்த்ததாக கூறப்படுவது என்னவோ பொய். எங்க அப்பா, அம்மாவுடன் அத்தை வீட்டில் சில வருடம் வாழ்ந்தோம். எங்க அப்பா இருந்த பின்னர் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம்.

இதையும் படிங்க: போங்கப்பா நான் போக மாட்டேன்!.. யூ டர்ன் எடுத்த சரவண விக்ரம்!.. தேவையா ப்ரோ இதெல்லாம்?

அதில் இருந்து தப்பிக்கவே நானும் அவரை அடித்தேன். பின்னர் சமாதானம் பேச வந்த அவர் வக்கீல் செளந்தர்யா என்பவரும் என்னையும், அக்காவையும் அடிக்க பாய்ந்தார்கள். நாங்கள் தற்காத்து கொள்ளவே அவரின் கையை பிடித்து நகத்தால் கீறினோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் மீதான வழக்கு தற்போது விசாரணையில் இருக்கிறது. 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.