Connect with us

Cinema News

ரம்யா கிருஷ்ணன் திருமண உறவு குறித்த ரகசியத்தை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!.. செம மேட்டர்!..

நடிகை ரம்யா கிருஷ்ணன் இதுவரை எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காத நடிகை என பயில்வான் ரங்கநாதனே கூறியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. 52 வயதிலும் கவர்ச்சியாகவும், கம்பீரமாகவும் நடிக்கக் கூடிய ஒரே நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான்.

நடிகர் சோவின் மருமகள் தான் ரம்யா கிருஷ்ணன் என்றும் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் வந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்றும் இருவரும் பல ஆண்டுகள் பேசாமல் இருந்த நிலையில், ஒரு கட்டத்துக்கு மேல் ரம்யா கிருஷ்ணனின் வளர்ச்சியை பார்த்து சோ பாராட்டி உள்ளார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் படத்தை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே ஆர்ஜே பாலாஜி!.. சிங்கப்பூர் சலூன் தலை தப்புமா?..

தெலுங்கில் அம்மனாக நடித்து பிரபலமான ரம்யா கிருஷ்ணன் சிம்பு, மகேஷ் பாபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு விட்டதா? கணவருடன் சேர்ந்து இருப்பது போன்றே தெரியவில்லையே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு அவர் தெலுங்கில் பிசியாக இருக்கிறார். நான் என் வேலையில் பிசியாக இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொள்வோம் எனக் கூறி அந்த வதந்திக்கும் அங்கேயே முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம். தெலுங்கு இயக்குநர் நாக வம்சியை திருமணம் செய்துக் கொண்டார் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியோட மோதுறேனா!.. அடபோங்கய்யா.. ஒரே ஓட்டம் எடுத்த ஜெயம் ரவி.. சைரன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

படையப்பா, பாகுபலி என கம்பீரமாக மிரட்டிய பின்னரும் பார்ட்டி படத்தில் மீண்டும் பஞ்ச தந்திரம் ஸ்டைலில் ரம்யா கிருஷ்ணன் நடித்து ஆச்சர்யப்படுத்தினார். அதே போல சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடித்ததை போல மற்ற நடிகைகள் யாரும் நடிப்பார்களா என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top