இனிமேல் கோட் படத்தில் இந்த வேலை மட்டும் வேண்டாம்!… வெங்கட் பிரபுவிடம் கறார் காட்டிய விஜய்…

Published on: January 25, 2024
---Advertisement---

Vijay: தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் சொல்வதை அப்படியே செய்யும் விஜயே தற்போதைய  நாட்களில் நிறைய கண்டிஷன் போடும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அவரின் அரசியல் எண்ட்ரியே காரணமாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் தி டைம் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட நடிகைகள் கூட்டம் அதிகம்.

Also Read

இதையும் படிங்க: விஜயகாந்த் இறந்த இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் நடந்தது இதுதான்!… ரகசியத்தினை உடைத்த பிரேமலதா…

அதுமட்டுமல்லாமல் எஸ்.ஜே.சூர்யா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், பிரபுதேவா என்ற ஸ்டார் நடிகர்கள் லிஸ்ட்டும் எகிறி இருக்கிறது. கிட்டத்தட்ட சயின்ஸ் பிக்‌ஷன் கதை என்பதால் இப்படம் மீது தற்போதே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக விஜயின் டி ஏஜிங் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படத்தின் 50 சதவீத வேலைகள் முடிந்துவிட்டது. அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்கு படக்குழு ஸ்ரீலங்கா செல்ல இருந்த நிலையில் விஜய் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்கு எதுவும் பங்கம் வரும் என்பதால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: நீங்க மட்டும் தான் காப்பி அடிப்பீங்களா? ரஜினி ஸ்டைலில் தளபதி69ஐ தயாரிக்க போவது யார் தெரியுமா?