Connect with us
IR-BR

Cinema History

பாரதிராஜாவுக்கு பாடம் கற்பித்த இளையராஜா… அது சரி… ரெண்டுபேருக்கும் ஆசான் யாரு தெரியுமா?

சினிமா உலகிற்குள் நுழைவது என்பது இளைஞர்களின் பெரும் கனவாகவே அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டுள்ளது. அந்த வகையில் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா, இளையராஜாவும் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்ற உண்மையை இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. பார்க்கலாமா…

சென்னைக்கு வந்த புதிதில், இளையராஜாவும், பாரதிராஜாவும் ஜெயகாந்தனைப் போய் பார்க்கிறார்கள். சினிமா வாய்ப்புக்காக வந்த அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஜெயகாந்தன் அப்போது சினிமாவில் எழுதிக் கொண்டு இருந்தார். ஏற்கனவே இளையராஜாவுக்கு ஜெயகாந்தனை தெரியுமாம். கம்யூனிஸ்ட் காலத்தில் இருந்தே பழக்கமாம்.

அவரைப் போய் பார்த்தால் சினிமாவுக்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று நினைத்தார். அதனால் தனியாகப் போவானேன் என்று பாரதிராஜாவையும் துணைக்கு அழைத்தாராம். அவர்களுடன் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரும் சேர்ந்து கொண்டாராம்.

Jayakanthan, Ilaiyaraja

Jayakanthan, Ilaiyaraja

மூவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெயகாந்தன் வீட்டுக்குப் போனார்களாம். வாங்க தோழர் என அன்போடு வரவேற்று உபசரித்தாராம் ஜெயகாந்தன். என்ன விஷயம் என்று கேட்க, இளையராஜா தயக்கத்துடன் சினிமாவில் முயற்சிக்க ஊரை விட்டு வந்துவிட்டோம் என்றாராம். உடனே கோபத்தில் ‘என்னை நம்பி வந்தீர்களா?’ என்றும், ‘என் அனுமதி இல்லாமல் எப்படி என்னை நம்பலாம்?’ என்றும் ஜெயகாந்தன் கேட்டாராம்.

அதன்பிறகு அமைதியானார் அவர். மூவரும் ஒன்றுமே பேசாமல் வெளியே வந்து விட்டார்களாம். இளையராஜாவோ வீட்டுக்கு வெளியே வந்ததும் விழுந்து விழுந்து சிரித்தாராம். பாரதிராஜா  ‘என்னய்யா இது கம்யூனிஸ்ட்… மேடைல மட்டும் அது இதுன்னு பேசறாரு.. வீடு தேடி வந்தவங்க கிட்ட எதுவுமே ஆறுதலா பேசலையே’ என கேட்டாராம்.

உடனே இளையராஜா, இல்லை பாரதி. ஆத்திரத்துல அவர் பேசினாலும், அதுல நியாயம் இருக்கு என்றாராம். ஆம் பாரதி. உங்களை நீங்க நம்புங்க… இதைத் தான் அவர் சொல்லாம சொல்லிருக்காரு என விளக்கம் கொடுக்க அப்பொது தான் பாரதிராஜாவுக்கு புரிந்ததாம். அதன்பிறகு தான் இருவரும் சினிமாவில் ஜெயித்தனர்.

மேற்கண்ட தகவலை ஒருமுறை இளையராஜாவே மேடையில் பேசியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top