Actress Radhika Sarathkumar: தமிழ் சினிமாவில் நடிப்பு இளவரசி என அழைக்கப்பட்டவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ராதிகா முதல் படத்திலேயே அற்புதமான நடிகை என்று பாராட்டப்பட்டார்.
லண்டனில் படித்தவர். கருப்பு நிறம் என ஆரம்பத்தில் இவரை நடிகையாக போட பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் தயங்கினார்கள். இருந்தாலும் பாரதிராஜா மிகத் துணிச்சலோடு என்னோட நாயகி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ராதிகாவை அறிமுகம் செய்தார்.
இதையும் படிங்க: ராஜா இசையில் பவதாரிணி பாடிய அந்த பாடல்!.. கேட்டாலே மனசு ரம்மியம் ஆயிடும்!..
அதன் விளைவு இன்று தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகையை தன் வசப்படுத்தியுள்ளது. ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் ராதிகா. சிவாஜியுடனும் நடித்து சிவாஜி வாயால் பாராட்டப்பெற்றவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஒரு பாடம் என்று சொல்லலாம்.
தற்போது உள்ள டாப் ஹீரோக்களும் இவர்தான் அம்மா. அம்மா கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை கலந்த தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார் ராதிகா. இந்த நிலையில் தன்னுடைய இணையதள பக்கத்தில் ராதிகா ஏதோ ஒரு படத்தை பற்றி கடுமையாக சாடியிருக்கிறார்.
இதையும் படிங்க: அப்படித்தான் சொல்வோம் சங்கி.. சங்கி.. சங்கி.. ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்த புளூ சட்டை மாறன்!..

அதாவது அந்த பதிவில் ‘எந்தப் படத்தையாவது பார்த்து கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்தப் படத்தை பார்க்கும் போது வாமிட் வர அளவுக்கு கோவமா வருது’ என அந்த பதிவில் ராதிகா பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன், அனிமல், ஜப்பான் போன்ற படங்களைத்தான் அதிகமாக கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர்.
