Cinema History
விஜயகாந்துடன் 21 முறை மோதிய சத்யராஜ் படங்கள்… வின்னர் யாரு தெரியுமா?
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடித்த படங்களுடன் புரட்சித்தமிழன் சத்யராஜ் நடித்த படங்கள் 21 முறை நேரடியாக மோதியுள்ளன. என்னென்ன என்று பார்ப்போமா…
உழவன் மகன் – ஜல்லிக்கட்டு
1987ல் விஜயகாந்த் நடித்த உழவன் மகன், சத்யராஜின் ஜல்லிக்கட்டு படம் ரிலீஸ் ஆனது. இவற்றில் விஜயகாந்த் படம் மெகா ஹிட். 1989ல் விஜயகாந்துக்கு ராஜநடை, தர்மம் வெல்லும் படங்களும், சத்யராஜிக்கு வாத்தியார் வீட்டு பிள்ளை படமும், திராவிடன் படமும் வெளியானது. இவற்றில் தர்மம் வெல்லும் படம் தான் மாஸ் ஹிட் ஆனது.
சத்ரியன் – மல்லு வேட்டி மைனர்
1990ல் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படமும், சத்யராஜ் நடித்த மல்லு வேட்டி மைனர் படமும் ரிலீஸ் ஆனது. இவற்றில் சத்ரியன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அதே ஆண்டில் விஜயகாந்தின் புலன் விசாரணை படமும், சத்யராஜின் நடிகன் படமும் ரிலீஸ் ஆனது. இவற்றில் புலன் விசாரணை மிகப்பெரிய வெற்றி பெற்றது.
1991ல் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படமும், சத்யராஜின் பிரம்மா படமும் வெளியானது. இவற்றில் கேப்டன் பிரபாகரன் 300 நாள்களைக் கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சின்னக்கவுண்டர் – ரிக்ஷா மாமா
1992ல் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படமும், சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படமும் ரிலீஸ். இவற்றில் சின்னக்கவுண்டர் மெகா ஹிட். அதே ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் பரதன் படமும், சத்யராஜின் தெற்கு தெரு மச்சான் படமும் ரிலீஸ். இவற்றில் பரதன் படம் தான் மெகா ஹிட்.
அடுத்தும் அதே ஆண்டில் விஜயகாந்துக்கு காவியத்தலைவன் படமும், சத்யராஜிக்கு திருமதி பழனிச்சாமி படமும் ரிலீஸ். இவற்றில் காவியத்தலைவன் தான் ஹிட். 1993ல் விஜயகாந்த் நடித்த கோவில் காளை படமும், சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் படமும் ரிலீஸ். இவற்றில் 2 படங்களும் ஹிட்.
சேதுபதி ஐபிஎஸ் – அமைதிப்படை
1994ல் விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் படமும், சத்யராஜின் அமைதிப்படை படமும் ரிலீஸ். இவற்றில் 2 படங்களும் செம ஹிட். ஆனால் விஜயகாந்த் படம் தான் அதிக நாள்கள் ஓடின. தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் படமும், சத்யராஜ் நடித்த வண்டிச்சோலை சின்ராசு படமும் ரிலீஸ். இவற்றில் ஆனஸ்ட்ராஜ் தான் சூப்பர்ஹிட்.
அதே ஆண்டில் விஜயகாந்த் நடித்த பெரிய மருது படமும், சத்யராஜின் நடிப்பில் வீரப்பதக்கம் படமும் ரிலீஸ். இவற்றில் பெரிய மருது தான் மிகப்பெரிய ஹிட்.
1995ல் விஜயகாந்தின் கருப்பு நிலா படமும், சத்யராஜின் எங்கிருந்தோ வந்தான் படமும் ரிலீஸ். இவற்றில் கருப்பு நிலா தான் சூப்hர் ஹிட்.
திருமூர்த்தி – மாமன் மகள்
1995ல் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படமும், சத்யராஜ் நடித்த மாமன் மகள் படமும் ரிலீஸ். இவற்றில் 2 படங்களும் சுமார் ரகம். 1996ல் விஜயகாந்தின் அலெக்சாண்டர் படமும், சத்யராஜின் சேனாதிபதி படமும் ரிலீஸ். இவற்றில் அலெக்சாண்டர் தான் ஹிட்.
1997ல் விஜயகாந்தின் தர்மசக்கரம் படமும், சத்யராஜின் வள்ளல் படமும் ரிலீஸ். இவற்றில் வள்ளல் தான் ஹிட்.
தர்மா – கல்யாண கலாட்டா
1998ல் விஜயகாந்தின் தர்மா படமும், சத்யராஜின் கல்யாண கலாட்டா படமும் ரிலீஸ். இவற்றில் தர்மா தான் மெகா ஹிட்.
1999ல் விஜயகாந்தின் கண்ணுபட போகுதய்யா படமும், சத்யராஜின் மலபார் போலீஸ் படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் படம் தான் 150 நாள்கள் ஓடி ஹிட் ஆனது. 2000ல் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் படமும், சத்யராஜ் நடித்த லூட்டி படமும் ரிலீஸ். இவற்றில் வாஞ்சிநாதன் படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட்.
2001ல் விஜயகாந்தின் தவசி படமும், சத்யராஜின் ஆண்டான் அடிமை படமும் ரிலீஸ். இவற்றில் தவசி தான் ஹிட். 2003ல் விஜயகாந்தின் சொக்கத்தங்கம் படமும், சத்யராஜின் ராமச்சந்திரா படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் படம் தான் 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது.