கேபிஒய் பாலா ஒரு பொண்ணோட கையை புடிச்சு காட்டுறாரே!.. அதுல என்ன இருக்குன்னு பாருங்க.. ஒரே ஷாக்!..

Published on: January 28, 2024
---Advertisement---

விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா சமீப காலமாக தனது சக்திக்கும் மீறி பலருக்கும் உதவி செய்து வருகிறார்.  ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்த பாலா அதன் பின்னர் மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்த போது 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உதவி செய்து பலரது நம்பிக்கைகளை சம்பாதித்தார்.

பாலாவுக்கு பின்னாடி ஏதோ அரசியல் சக்தி உள்ளது என்றும் கூடிய சீக்கிரமே ஏதோ ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிக்கப் போகிறார் என்றும் விமர்சனங்களும் நல்லது செய்பவருக்கு எதிராக கிளம்பும் பிரச்சனைகளும் கேபிஒய் பாலாவுக்கு எதிராக குவிய ஆரம்பித்து வருகின்றன.

இதையும் படிங்க: சரித்திரம்.. சாதனை.. சகாப்தம் படைத்த கேப்டனின் வெற்றிப் படங்கள் – ஒரு பார்வை

அதெல்லாம் கண்டுக்கொள்ளாமல், தனக்கு எந்த கட்சியும் தெரியாது என்றும் அரசியல் நோக்கத்துக்காக இதெல்லாம் செய்யவில்லை என அதிரடியாக கூறி வரும் பாலா தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், கேபிஒய் பாலாவின் பெயரை பெண் ஒருவர் தனது கைகளில் பச்சைக் குத்தியுள்ள நிலையில், அவரது முகத்தைக் கூட காட்டாமல் மறைத்து விட்டு அவர் போட்டுள்ள டாட்டூ புகைப்படத்தை மட்டும் காட்டி வொண்டர் உமன் என பாராட்டி உள்ளார் கேபிஒய் பாலா.

இதையும் படிங்க: இது நடந்த அப்புறம்தான் உனக்கு கல்யாணம்!. விஜயகாந்துக்கு கண்டிஷன் போட்ட இப்ராஹிம் ராவுத்தார்..

பாலிவுட் நடிகர்கள் பெரிதளவில் உதவாத நிலையில், வில்லன் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி பிரபலமானார். அதே போல கேபிஒய் பாலா தமிழ்நாட்டில் உதவி செய்து வருவதால் மக்களின் ஹீரோவாக மாறியுள்ளார் என்கின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.