ரஜினி வாங்கிய முதல் காருக்குப் பின்னால இப்படி ஒரு அவமானமா?.. சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான் ஹைலைட்!..

Published on: January 29, 2024
rajini
---Advertisement---

நடிகர்கள் கார் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அந்தக் கார் முதன் முதலாக வாங்கும் போது தான் அது பெரிய விஷயம். அந்த வகையில் விஜய், அஜீத் வாங்கிய கார்களும் மறக்க முடியாத விஷயம். ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையில் கார் வாங்கிய சம்பவம் தான் ரொம்பவே சுவாரசியமானது.

கார், சூப்பர்ஸ்டார் என்றதும் நமக்கு லட்சுமி ஞாபகம் தான் வரும். படிக்காதவன் படத்தில் கார் டிரைவராக வந்து அசத்துவார் ரஜினி. அப்போது படத்தில் வரும் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணும்போது எல்லாம் ‘லட்சுமி வண்டியை எடு’ன்னு ரஜினி காருடன் அழகாக பேசி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதை யாராலும் இன்று வரை மறக்க முடியாது.

Padikathavan
Padikathavan

முதன்முதலாக கார் வாங்கிய சம்பவத்தை தர்பார் படத்தோட ஆடியோ லாஞ்சில் சூப்பர்ஸ்டாரே சொல்லி விட்டார். 16 வயதினிலே படத்திற்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிறார். அப்போது அவர் அந்தப் படத்தோட சம்பளத்தைப் பற்றி விசாரித்துவிட்டு அட்வான்ஸ் கேட்கிறார். நடிங்க சார்னு சொல்லி காரில் ஏவிஎம்க்கு அழைத்துச் செல்கிறார்கள்.

ரெண்டு மூணு தடவை அட்வான்ஸ் கேட்டதும் இருங்க புரொடியூசர் வரட்டும் சார்னு சொல்லிட்டாங்க. அப்புறம் மேக் அப் போடுறதுக்கு முன்னாடி ‘நிறுத்துங்க சார். அட்வான்ஸ கொடுங்க. அதுக்கு அப்புறம் மேக் போடலாம்’னு சொன்னாராம் ரஜினி. அப்புறம் புரொடியூசர் வேகமா வந்துட்டு ‘என்னய்யா 10 படம் பண்ணிட்டு பெரிய ஹிட் கொடுத்துட்டீயா நீ?  அட்வான்ஸ்னு கேட்குற? என கோபமாக கேட்டுவிட்டு, ரஜினியை மேக் அப் சேரில இருந்து இறக்கி விட்டுட்டு ‘வெளியே போயா’ என சொல்லி அனுப்பி விடுகிறார். வீட்டுக்கு போறதுக்கு கூட ரஜினி பாக்கெட்ல காசு இல்ல.

அப்பதான் ‘இதே ஏவிஎம்ல கார்ல வரணும்’னு ரெண்டு வருஷம் உழைச்சாராம் ரஜினி. பியட் 118 என்ற காரை வாங்கிட்டு ஏவிஎம் வளாகத்துல ரெண்டு ரவுண்டு சுற்றிட்டு அந்த கார் மேல ஏறி உட்கார்ந்து 555 சிகரெட்டை ஸ்டைலாக ஊதினாராம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.