லால் சலாம் படம் வெளியாகும் போது இப்படி சொல்லிட்டாரே விஷ்ணு விஷால்!.. ஐயோ பாவம்!..

Published on: January 31, 2024
---Advertisement---

Vishnu Vishal: தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்தாலும் பெரிய இடத்துக்கு வராமல் இருப்பதற்கு தன்னுடைய வாழ்க்கையே ஒரு காரணம் என நடிகர் விஷ்ணு விஷால் கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ஹீரோவாக அறிமுகமானர் நடிகர் விஷ்ணு விஷால். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. மிகப்பெரிய ஹிட் இல்லை என்றாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே பெற்றது.

இதையும் படிங்க: என் கேரக்டர் தெரிஞ்சா பெண்கள் இனி அப்படி சொல்லவே மாட்டாங்க! அரவிந்த்சாமியின் இன்னொரு பக்கம்

ஆனால் அவர் நடிப்பில் வெளியான ராட்சசன் மிகப்பெரிய அளவில் அவருக்கு அங்கீகாரத்தினை கொடுத்தது. இதையடுத்து கடந்த வருடம் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த கட்டா குஷ்தி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்.

அப்படம் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு, சில ஷாக்கிங் தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார். நான் போலீஸ் ஆபிஷர் பையன் என்பதால் அட்வான்டேஜ் இருந்தது. ஆனால் அது எங்களை வளர்க்கலை. நான் ஒரு போலீஸ் ஆபிஷர் பையன் என்பதால் நான் சீக்கிரமாக ஒரு பெரிய தயாரிப்பாளரை பார்க்க முடிந்தது. அவ்வளவு தான். சொல்லப்போனால் இது எனக்கு நெகட்டிவ்வாகவும் அமைந்தது.

இதையும் படிங்க: என்ன தான் அம்மா பாசம் போக மாட்டிங்குதே முத்து!… விஜயா பாத்துக்கோங்க.. இல்ல கஷ்டம்

எங்கு நான் அவர்களிடம் போய் சம்பளம் கேட்டு என்னுடைய பெயரை கெடுத்து விடுவார்களோ, அதனால் என்னுடைய வாய்ப்பு மிஸ் ஆகுமோ என்று பயத்தால் நானும் கேட்கவே இல்லை. படம் ஹிட்டாகி விட்டது. அது போதும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன் என்றார்.