Connect with us

Review

இந்த முறையாவது சந்தானம் சிரிக்க வைத்தாரா?.. வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம் இதோ!..

டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் அதிகபட்சமாக 600 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நான் நடித்ததிலேயே பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இந்த வடக்குப்பட்டி ராமசாமி தான் என சந்தானம் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ், கிக் மற்றும் 80ஸ் பில்டப் என ஷாருக்கான் போல வரிசையாக ஒரு வருஷத்தில் 3 படங்களை ரிலீஸ் செய்தார். ஆனால், அதில், டிடி ரிட்டர்ன்ஸ் மட்டும் தான் தேறியது.

இதையும் படிங்க: என்கிட்டையே திமிரா நடந்துக்கலாமா? சீண்டிய தயாரிப்பாளரை கடனாளியாக்கிய கமல்ஹாசன்…

மற்ற இரண்டு படங்களான கிக் மற்றும் 80ஸ் பில்டப் தெறித்து ஓட வைத்தது. தம்பி அந்த பக்கம் போயிடாதீங்க என பலரும் ட்ரோல் பண்ணினார்கள். இந்நிலையில், மஞ்ச சட்டை, கையில சூலம், விக் தலை என வித்தியாசமாக இருந்த சந்தானம் படம் சரியா வருமா என்கிற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு காமெடி காட்சிகள் திடீரென இந்த முறை சந்தானம் படத்திற்கு செட்டிங்காக அமைந்து சூப்பர் ஹிட் படமாக வடக்குப்பட்டி ராமசாமி மாறியிருக்கிறது.

பானைகளை வைத்து வியாபாரத்தை நேர்மையாக செய்ய நினைக்கும் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கவில்லை. இந்த உலகத்துல பித்தலாட்டம் பண்ணி ஏமாற்றி பிழைப்பவர்கள் தான் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என நினைத்துக் கொண்ட சிறு வயது சந்தானம் கடவுள் பக்தி என்கிற பெயரில் ஊர் மக்களிடம் உள்ள மூடநம்பிக்கையை நன்றாக புரிந்துக் கொண்டு ஏமாற்றும் வேலைகளில் இறங்கி அதிகமாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். அந்த ஊருக்கு வரும் தாசில்தார் ஒருவருக்கும் இவருக்கும் நடக்கும் பிரச்சனை கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் கதை.

இதையும் படிங்க: நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!. இன்ஸ்டாகிராமில் வெளியான அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், சேஷு, ரவி மரியா, ஜான் விஜய் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் அனைவரையும் விட நிழல்கள் ரவி காமெடி டிராக்கில் சிறப்பாக ஸ்கோர் செய்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். மேலும், கூல் சுரேஷ், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோரின் காமெடி காட்சிகளும் படத்திற்கு பலம் தான்.

வடக்குப்பட்டி ராமசாமி – வசூல் ராஜா!

ரேட்டிங் – 3.75

author avatar
Saranya M
Continue Reading

More in Review

To Top