Connect with us
mgr

Cinema News

1972 முதல் 2024 வரை.. கட்சி ஆரம்பித்த நடிகர்கள்! எல்லாரையும் நம்பியாச்சு.. இவரையும் நம்புவோம்

Cinema Actors: தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் எப்படியாவது கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வாய்ப்பை வாங்கி விடுகின்றனர். ஒரு முறை சினிமாவிற்குள் வந்துவிட்டால் அடுத்து அவர்கள் தோற்பதும் ஜெயிப்பதும் அவரவர் முயற்சி, கடின உழைப்பு இவற்றை பொறுத்தே அமைகிறது.

அப்படி சினிமாவிலும் மக்கள் அபிமானங்களை பெற்ற நடிகர்கள் அடுத்ததாக அவர்களின் டார்கெட்டாக பார்க்கப்படுவது அரசியல். அப்படி சினிமாவில் நடித்து அதன் பின் அரசியலுக்குள் வந்த நடிகர்களைத்தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: நல்லா சொன்னீங்க!.. விஜய் அரசியல் இப்படித்தான் இருக்குமா? புளூ சட்டை மாறன் போட்ட பதிவு

முதலில் எம்ஜிஆர். மக்களின் ஏகோபித்த அபிமானங்களை பெற்ற ஒரே நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். இன்று பல குடும்பங்கள் எம்ஜிஆரின் புகைப்படத்தை வைத்து வணங்கி வருகின்றனர். அந்தளவுக்கு பல்வேறு உதவிகள் , நலத்திட்டங்களை செய்து அரசியலிலும் கால்பதித்தார். பொதுவாழ்க்கையிலும் ஒரு தன்னிகரற்ற தலைவராகவே இருந்தார் எம்ஜிஆர். 1972 ஆம் ஆண்டுதான் எம்ஜிஆர் அவரது கட்சியை ஆரம்பித்தார்.

அடுத்ததாக 1989 ல் சிவாஜி  ‘தமிழக முன்னேற்ற முன்னனி’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். சினிமாவில் எம்ஜிஆருக்கு இணையாக இருந்த சிவாஜி அரசியலில் நிற்க முடியவில்லை. அடுத்ததாக பாக்யராஜ் 1989ல்  ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இப்போது அந்த கட்சி இருந்த இடமே தெரியாமல் மாறிவிட்டது.

இதையும் படிங்க: சைக்கோ வேடத்தில் மிரட்டிய தமிழ் சினிமா நடிகர்கள்!.. மறக்க முடியாத ராட்சசன்!..

அடுத்ததாக 1991 ல் டி.ராஜேந்தர்  ‘தாயக மறுமலர்ச்சிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து அதை செயல்படுத்தி வருகிறார். அவரை அடுத்து 2005 ல் விஜயகாந்த்  ‘தேமுதிக’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். இவரும் எம்ஜிஆரை பின்பற்றியே அரசியலுக்குள் வந்தார். வந்தவர் ஒரு கட்டத்தில் ஜெயித்தார். ஆனால் அந்த வெற்றி கடைசி வரைக்கும் நிலைக்க வில்லை.

அடுத்ததாக 2009 ல் நடிகர் கார்த்திக்  ‘நாடாளும் மக்கள் கட்சி’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். இப்போது கார்த்திக்கையும் பார்க்க முடியவில்லை. அவரது கட்சியையும் பார்க்க முடியவில்லை. அடுத்ததாக 2018ல் கமல்  ‘மக்கள் நீதி மையம்’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து இன்று வரை அதை செயல்படுத்தி வருகிறார். ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக அவரது கட்சி பேசப்பட வில்லை.

இதையும் படிங்க: விஜயுடன் நடிக்க மாட்டேன்!.. கண்டிஷன் போட்டு நடிக்க வந்த ஷகீலா.. அட அந்த படமா!..

2007 ல் சரத்குமார்  ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். சரத்குமாருக்கு அது இப்போது ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.

இப்படி கருணாஸ்  ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்ற பெயரிலும் மன்சூர் அலிகான்  ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற பெயரிலும் கட்சியை ஆரம்பித்தார்கள். ஆனால் இவர்களில் எம்ஜிஆர், விஜயகாந்த் மட்டும்தான் மிகவும் போற்றத்தக்க தலைவர்களாக பார்க்கப்பட்டனர். இப்போது இந்த லிஸ்ட்டில் விஜயும் சேர்ந்திருக்கிறார்.  ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் இன்று அவரது கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அது நின்று ஜெயிக்குமா இல்லை ஓடுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top