Cinema History
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி பற்றி இப்படி எல்லாமா பேசினாரு சந்திரபாபு? அதான் அவருக்கு பேட் லக்காச்சா?
சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை சோகமயமானது. ஜெமினியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். அதன் காரணமாக சாவித்திரியுடனும் நெருக்கமாகப் பழகியுள்ளார். தன் மனதில் பட்டதை பட் பட்டென்று பேசும் குணம் படைத்தவர் சந்திரபாபு. இதனால் அவருக்கு பல சிக்கல்கள் வந்துள்ளன. என்னென்ன என்று பார்ப்போமா…
நகைச்சுவை மன்னன் சந்திரபாபுவைப் பற்றி தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது. அவர் படங்களில் பேசும் டயலாக்குகளை விட அவரது பாடி லாங்குவேஜைப் பார்க்கும்போது தான் நமக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.
ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்ய அவர் தயங்கியதே கிடையாதாம். அதனால் பெரிய பிரச்சனை ஆகிவிடுமோ என்றும் பயப்பட மாட்டாராம். மனதில் தோன்றியதை டக்கென்று சொல்லும் திறன் கொண்டவர். இதைத் தான் ஆங்கிலத்தில் ஓபன் டைப்னு சொல்வாங்க.
ஒரு முறை நிருபர் ஒருவர் ஜெமினிகணேசனைப் பற்றி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டாராம். அதற்கு சந்திரபாபு அவன் என்னோட ஆதிகால நண்பன். திருவல்லிக்கேணியில குப்புமுத்து முதலி தெருவில் ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் தாய் உள்ளம் படத்தில் நடிச்சிக்கிட்டு இருந்தான்.
அப்போ அவனுக்கு காமெடி, லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சிக் காட்டினேன். அது மட்டுமல்லாமல் அப்போது, அடே அம்பி, இத்தனை வருஷமாயும் நடிப்புல ஒண்ணும் இல்லையேடா… போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்தியான்னு ஜெமினியைப் பார்த்துக் கேட்டாராம் சந்திரபாபு. அதே போல சிவாஜியைப் பற்றி கேட்டாங்களாம். அதற்கு அவர் ஒரு நல்ல நடிகர்.
ஆனா அவரை சுற்றி ஜால்ரா கூட்டம் நிறைய இருக்கு. அது போயிடுச்சுன்னா தேறுவார்னு சொன்னாராம். எம்ஜிஆர் பற்றி கேட்ட போது, அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம் என நக்கல் அடித்தாராம். இப்படி எல்லாம் பேசப் போயி தான் அவரு கூட அந்த 3 ஜாம்பவான்களும் தொடர்ந்து நடிக்கவே இல்லையாம்.