
Cinema News
ஜெயலலிதாவின் விழாவில் அப்படி பேசிய ரஜினி!.. அரசியலுக்கு வராமல் போனதற்கு காரணம் அதுதானா?!.
Published on
By
நடிகர் ரஜினி பாட்ஷா பட விழாவில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவார் என பொதுமக்களும், அவரின் ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்தனர். அதன்பின் தான் நடிக்கும் படங்களில் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கி வசனங்களை பேசி வந்தார்.
இது ரஜினி அரசியலுக்கு வருவார் என பெரிதும் எதிர்பார்த்த அவரின் தீவிர ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது. வசனங்கள் மட்டுமில்லாமல் படையப்பா படத்தில் நீலாம்பரி வேடத்தையே ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கி இருந்தனர். ‘வர வேண்டிய நேரத்துக்கு நான் கண்டிப்பா வருவேன்’ என ரஜினி சொன்னதற்கு விசில் அடித்து சந்தோஷப்பட்டனர் அவரின் ரசிகர்கள்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படங்கள்!.. அட இவ்வளவு இருக்கா?..
ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது உடல்நலம் பாதிகக்ப்பட்ட ரஜினி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார். அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததாக சொல்லப்பட்டது. ஒருபக்கம் அவருக்கு நெருக்கமான பல அரசியல்வாதிகளுடனும் ரஜினி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். ஒருகட்டத்தில் அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்தார். ‘ஆன்மிக அரசியல்’ செய்யப்போவதாகவும் கூறினார். ‘என் கொள்கை என்னவென ஒரு நிருபர் என்னிடம் கேட்டார்.. தலையே சுத்திடுச்சி’ என அவர் சொல்ல அதுவே ட்ரோலில் சிக்கியது.
rajini
அதன்பின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது அவரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. எனவே, தனது உடல்நிலையை காரணம் காட்டி ‘நான் அரசியலுக்கு வரப்போவதில்லை’ என அறிவித்தார் ரஜினி. 50 சதவீத ரஜினி ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் மீதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இப்போது விஜயே அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ரஜினியின் அண்ணாமலை படம் வெளிவந்திருந்த நேரம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ரஜினியும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: செம வைலண்ட்டாக இருந்த ரஜினி!. அம்மாவை போல வந்து காப்பாற்றிய சமூக சேவகி.. ஆச்சர்ய தகவல்!..
அந்த விழாவில் பேசிய ரஜினி ‘எனக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் இந்த விழாவுக்கு வந்திருக்க மாட்டேன். அவரும் என்னை அழைத்திருக்க மாட்டார். பெண்கள் சாதிப்பதற்கு பின்னால் பட தடைகள் இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு சாதனை பெண்மணியாக அவர் மாறியிருக்கிறார்.
jayalalitha
அதை நான் மனதார பாராட்டுகிறேன். என்னை பொறுத்தவரை சினிமாவில் நடித்துக்கொண்டு நான் நிம்மதியாக இருந்து வருகிறேன். ஒருத்தரின் வாழ்வில் நிம்மதி கெட வேண்டும் எனில் ஆண்டவன் அவருக்கு நிறைய பணம் கொடுப்பார். அதையும் தாண்டி அவரின் நிம்மதியை அடியோடு காலி செய்ய வேண்டும் என நினைத்தால் அவரை அரசியல்வாதி ஆக்கிவிடுவார்’ எனப்பேசியிருந்தார்.
இப்படி நினைப்பதுதான் ரஜினியின் உண்மையான குணம். அதன்பின் அவர் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தாலும் அடிமனதில் அவருக்கு அந்த விழாவில் பேசியதுதான் ஒலித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ‘நான் அரசியலுக்கு வரவில்லை’ என அறிவித்தாரா என்னவோ!…
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...