Cinema News
ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..
தனுஷுடன் இணைந்து அவரின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அனிருத். இவரின் ரஜினியின் உறவுக்காரரின் மகனும் கூட. அந்தவகையில் தனுஷுக்கும் அவர் உறவினர் என்பதால் இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். இருவரும் இணைந்து உருவாக்கிய ‘ஒய் திஸ் கொல வெறி’ ஆல்பம் பாடல் உலகமெங்கும் பிரபலமாகியது.
அதைத்தொடர்ந்து தனுஷின் 3, வேலை இல்லா பட்டதாரி, மாரி உள்ளிட்ட சில படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். இந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான் படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார்.
இதையும் படிங்க: சௌந்தர்யா இயக்கத்தில் அந்த ஹீரோ!. கெஸ்ட் ரோலில் ரஜினி!… பரபர அப்டேட்…
ஒருகட்டத்தில் தனுஷுக்கும், அனிருத்துகும் இடையே விரிசல் விழ சிவகார்த்திகேயன், நெல்சன், விக்னேஷ் சிவன் என வேறு கேங்குடன் இணைந்தார் அனிருத். மேலும், விஜய், அஜித், ரஜினி ஆகியோரின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்து ஒருகட்டத்தில் பெரிய நடிகர்களின் அனைத்து படங்களுக்கும் இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறினார்.
ரஜினியின் பேட்ட, தர்பார், ஜெயிலர் மற்றும் கமல் நடித்த விக்ரம் ஆகிய படங்களுக்கு அனிருத்தே இசையமைத்தார். மேலும், ரஜினி இப்போது நடித்து வரும் வேட்டையன் மற்றும் அடுத்து நடிக்கவுள்ள லோகேஷ் கனகராஜின் படம் என எல்லாவற்றுக்கும் அவர்தான் இசையமைக்கவுள்ளார். ஒருபக்கம் கமலின் இந்தியன் 2 படத்திற்கும் அவர்தான் இசை.
இதையும் படிங்க: ரஜினி படங்களோடு மோதி மாஸ் காட்டிய ராமராஜன்!.. அட இவ்வளவு படங்களா?!..
இந்நிலையில், ஐஸ்வர்யா அப்பா ரஜினியை வைத்து லால் சலாம் படத்தை எடுத்த நிலையில், மற்றொரு மகள் சௌந்தர்யாவுக்கும் அப்பாவை வைத்து படமெடுக்கும் ஆசை வந்துள்ளது. இதற்கு ரஜினியும் சம்மதம் சொல்லிவிட்டாராம். ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.
அனிருத் மிகவும் பந்தா செய்கிறார். எனவே இந்த படத்திற்கு அவரின் இசை வேண்டாம். ஜிவி பிரகாஷிடம் போவோம் என சௌந்தர்யா நினைக்கிறாராம். அதேநேரம், ‘அனிருத்தே இருக்கட்டும்’ என ரஜினி சொல்லிவிட்டால் கடைசி நேரத்தில் அது மாறவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.