Lal salaam review: ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம்தான் லால் சலாம். ஏற்கனவே 3, வை ராஜா வை ஆகிய படங்களை ஐஸ்வர்யா இயக்கியிருந்தாலும் இந்த படம் அவருக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில், அவரின் அப்பா ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.
லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மேலும், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமையா, நிரோஷா என பலரும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். இந்த படம் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த சிலர் டிவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ‘லால் சலாம் படத்தின் இறுதிகாட்சி சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு நல்ல மெசேஜை சொல்லி இருக்கிறார்கள். ரஜினிகாந்த் சிறப்பாக நடித்திருக்கிறார்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

இன்னொருவர் ‘படத்தின் இரண்டாம் பாதியில் நல்ல உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கிறது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக்காட்சி அழகு. முக்கிய மற்றும் பாதிப்பான படமாக உருவாகியிருக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு நல்ல அழுத்தமான கருத்தை இப்படம் சொல்லுகிறது. ரஜினி வரும் காட்சிகளும், அவர் பேசும் வசனங்களும் செம மாஸாக இருக்கிறது’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. ரஜினி வரும் காட்சிகள் படத்திற்கு பெரிய பலம். கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. முதல் பாதியில் சில காட்சிகள் போர் என்றாலும் இரண்டாம் பாதி அதை மறக்க வைக்கிறது. எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ரஹ்மானின் பாடலும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. ஐஸ்வர்யா இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
