Connect with us
savitri

Cinema History

பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…

தமிழ் சினிமா மட்டுமல்ல. பொதுவாக சினிமா ரசிகர்களுக்கு ஒரு மனநிலை உண்டு. ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்தால் ஏற்றுக்கொள்வார்கள். அதேபோல், வில்லன் நடிகர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினாலும் ஏற்றுக்கொள்வார்கள். சத்தியராஜ், சரத்குமார் என இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

ரஜினி கூட சந்திரமுகி படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் வில்லனாகவே நடித்திருப்பார். ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த சத்தியராஜ் அமைதிப்படை படத்தில் வில்லனாக நடித்தார். படமோ சூப்பர் ஹிட். பல படங்களில் வில்லனாக நடித்த சரத்குமாரும் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி முன்னணி நடிகராக மாறினார்.

இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?

ஆனால், ஒரு நடிகரும், நடிகையும் தங்கையாக நடித்து அந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து அவர்களின் மனதில் பதிந்துவிட்டால் அதே நடிகை, அதே நடிகருக்கு ஜோடியாக நடித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்து நடிகையர் திலகம் சாவித்திரிக்கே நடந்திருக்கிறது. 1950களில் ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் சாவித்ரி.

மிஸ்ஸியம்மா படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் எம்.ஜி.அர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பலருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிவாஜிக்கு தங்கையாக நடித்த திரைப்படம்தான் பாசமலர். இந்த படத்தில் சிவாஜியும், சாவித்ரியும் அண்ணன் – தங்கையாகவே வாழ்ந்திருந்தனர்.

இதையும் படிங்க: அப்பா எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?… ஜெமினி கணேசன் பற்றி பேசும் சாவித்ரி மகன்…

மனதை நெகிழவைக்கும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ரசிகர்களை உருகவைத்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், இதுவே சாவித்ரிக்கு எதிராக அமைந்தது. அதன்பின் சில படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக சாவித்ரி நடித்த படங்கள் வெற்றியை பெறவில்லை.

கடனில் மூழ்கி, ஜெமினி கணேசனை பிரிந்து, மதுப்பழக்கத்திற்கும் ஆளாகி கடைசியாக பிராப்தம் என்கிற படத்தை தயாரித்து இயக்கினார். இந்த படத்தில் சிவாஜியும் நடித்தார். ஆனால், இந்த படம் படுதோல்வி அடைந்து மேலும் கடனாளி ஆனார் சாவித்ரி. ஒருகட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தும் போனார் என்பதுதான் சோகம்.

இதையும் படிங்க: இந்த படத்துல ஜெமினி நடிக்கக்கூடாது!.. சாவித்ரி போட்ட கண்டிஷனில் தலைதெறிக்க ஓடிய இயக்குனர்…

google news
Continue Reading

More in Cinema History

To Top