மோடி ஒரு அர்பன் ஹிட்லர் – பிரபல இயக்குனர் கருத்து !

Published on: December 24, 2019
---Advertisement---

4077b3cf30934b3b8da4288886fa7218

மோடி பேசும் வீடியோ ஒன்று ஹிட்லர் பேசும் வீடியோவோடு இணைத்து மோடியை அர்பன் ஹிட்லர் என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி நாட்டு மக்களிடம் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில்என்னை யாரெல்லாம் வெறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். என்னை வெறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தேசத்தை வெறுக்க்காதீர்கள்’ என மோடி வீராவேசமாக பேசுகிறார். இதேபோல ஹிட்லரும் தனது நாட்டு மக்களிடம் இதே வார்த்தைகளை பேசும் வீடியோவும் உலாவருகிறது.

இந்த இரு வீடியோக்களையும் ஒன்றாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மோடியை அர்பன் ஹிட்லர் என கேலி செய்துள்ளார். அனுராக் காஷ்யப் தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment