சிவக்குமார் வீட்டு குத்துவிளக்கா இது? வர வர குறைஞ்சுக்கிட்டே போகுது.. வைரலாகும் ஜோதிகாவின் வீடியோ

Published on: February 13, 2024
jyothika
---Advertisement---

Actress Jyothika: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஜோதிகா இரண்டாவது படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். அதிலிருந்தே அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம் என முக்கியமான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் பெரும் அன்பையும் பெற்றார். மும்பையில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு ஆதிக்கம் பெற்ற நடிகையாக மாறினார் ஜோதிகா. தமிழ் மக்களும் ஜோதிகாவை பாசத்துடன் அரவணைத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: எழுதும்போது தப்பாச்சி.. அதுவே அவருக்கு பேர் ஆச்சி!.. கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்..

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்த நிலையில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சென்னையிலேயே செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாள்கள் சினிமாவிற்கு பிரேக் கொடுத்த இவர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.

அதோரு சூர்யா மற்றும் தன் குழந்தைகளுடன் மும்பையில் தற்போது செட்டிலாகியிருக்கிறார் ஜோதிகா. மும்பை சென்ற பிறகு ஹிந்தியிலும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஏங்கப்பா… இந்த ரோகினி பிரச்னையை மாட்டிவிட மாட்டிங்களா!… மீனாக்கு தான் மீண்டும் பிரச்னையா?

இந்த நிலையில் ஜோதிகாவின் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட ஒரு பாலிவுட் நடிகையை போலவே மாறியிருக்கிறார். ஷார்ட்டான முடியுடன் கலரிங் செய்து பக்கா ஸ்டைலாக நடந்து வரும் ஜோதிகாவின் வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C3Rm-PEMdzO/?igsh=YzVrdGgwY3F4bHdr

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.