வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…

Published on: February 13, 2024
ilayaraja
---Advertisement---

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. மண்வாசனை மிக்க பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். இவரின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் ரசிகர்களை கட்டிப்போட்டார்.

ஒருகட்டத்தில் இளையாராஜா பாடல்கள் இல்லாமல் படங்களே உருவாகவில்லை. படத்தின் வெற்றிக்கு இளையராஜா தேவைப்பட்டார். எனவே, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரின் அலுவலகம் முன்பு தவம் கிடந்தார்கள். இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டுவிட்டால் அந்த படம் ஹிட் என்கிற நிலைதான் 80களில் இருந்தது.

இதையும் படிங்க: என்னிடம் ரஜினி வாய் விட்டு கேட்டது இது ஒன்னை தான்.. வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

அதேபோல், 80களில் நிழல்கள் படம் மூலம் பாடல்களை எழுத துவங்கி பாடலாசிரியராக ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் வைரமுத்து. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவைகளை படித்த பாரதிராஜா வைரமுத்துவை தனது படத்தில் பாடல் எழுத வைக்க வேண்டும் என நினைத்தார்.

ilayaraja

அப்போது அவர் ‘நிழல்கள்’ எனும் படத்தை துவங்கியிருந்தார். அதற்கு இசை இளையராஜா. காட்சிப்படி இயற்கையை ரசிக்கும் கதாநாயகன் பாடும் பாடல் அது. இளையராஜா முன்பு பாடல் எழுத வைரமுத்து அமர்ந்தார். ராஜாவுக்கு ஏனோ வைரமுத்துவை பிடிக்கவில்லை. இவரை அனுப்பிவிட்டு வேறு பாடலாசிரியரை வைத்து எழுதுவோம் என நினைத்தார். ஏனெனில் அவருக்கு வைரமுத்து மீது நம்பிக்கை இல்லை.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.

ட்யூனை வாசித்து காட்டினார். வைரமுத்து பாடலை சுலபமாக எழுதிவிடக்கூடாது என்று மிகவும் கடினமான டியூனை போட்டு காட்டினார். ‘தன தன தா நா நா நனன்னா’ என ஒரு ஒலிக்கு ஒரு வார்த்தை வருவது போல டியூன் போட்டார். வைரமுத்து அசரவில்லை. ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்றார். இளையராஜாவுக்கு ஆச்சர்யம். ‘வான மகள் நாணுகிறாள். வேறு உடை பூணுகிறாள்’ என அசத்தினார் வைரமுத்து.

பாடலாசிரியர் ஆக வேண்டும் என நினைத்த உடனே 200 ஹிந்தி பாடல்களின் டியூனுக்கு பாடல் வரிகளை எழுதி பார்த்து பயிற்சி பெற்றிருந்தார் வைரமுத்து. அதோடு, தமிழ் பாடல்களுக்கும் அவரின் சொந்த வரிகளை போட்டு பாடல்களை எழுதி பயிற்சி எடுத்திருந்தார். ‘இது ஒரு பொன் மாலை பொழுது’ முழுப்பாடலையும் 5 நிமிடங்களில் எழுதி கொடுத்தார் வைரமுத்து. அவரின் வரிகள் ராஜாவை ஆச்சர்யப்படுத்தியதோடு அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.

அதன்பின் பல வருடங்கள் ராஜா கூட்டணியில் வைரமுத்து பல பாடல்களை எழுதினார். ஆனால், சில காரணங்களால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்பதுதான் சோகம்.

இதையும் படிங்க: மொத்த யூனிட்டும் எதிர்ப்பு… விடாப்பிடியாக இருந்த பாலசந்தர்… சாதித்துக் காட்டிய வைரமுத்து!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.