பெரிய ஆப்பா வைக்க போறாங்க போலயே… முத்துக்கு தான் எப்பையும் பிரச்னை கொடுப்பீங்கப்பா…

Published on: February 14, 2024
---Advertisement---

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் சத்யாவை போட்டு அடித்து விடுகிறார் முத்து. கடைசியில் கையை முறுக்கிவிட அவரை செல்வம் மற்றும் அவர் நண்பர்கள் தடுத்து விடுகின்றனர். செல்வம் சத்யாவை அங்கிருந்து போ எனக் கூறி விடுகின்றனர்.

சிட்டி சத்யாவை அழைத்து கொண்டு தன்னுடைய அலுவலகத்துக்கு சென்று விடுகிறார். ஆனால் சத்யாவுக்கு தொடர்ந்து கைவலிக்கிறது. மருத்துவமனை போகலாம் எனக் கேட்க ஆனால் அவர் மறுத்துவிடுகிறார். வீட்டிற்கு போகிறேன் எனச் சொல்லி கிளம்பிவிடுகிறார்.

இதையும் படிங்க: உலகளவில் 5 நாளில் லால் சலாம் வசூல் எவ்வளவு தெரியுமா?.. ரஜினி மகளால் நொந்து நூடுல்ஸ் ஆன லைகா!

வீட்டிற்குள் வந்தவரை ஏன் லேட் என இந்திரா, சீதா கேட்க அவர் வலியால் துடிக்கின்றார். என்ன ஆச்சு எனக் கேட்க பைக்கில் இருந்து விழுந்து விடுவதாக சொல்கிறார். இருவரும் சேர்ந்து சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு ஸ்கேன் செய்ய சொல்கிறார்.

எப்படி விழுந்த எனக் கேட்க பைக்கில் விழுந்ததாகவே சத்யா சமாளிக்கிறார். சரியென எனச் சொல்லி விடுகிறார் மருத்துவர். மீனா பதறி அடித்து மருத்துவமனைக்கு வருகிறார். மாமா வரலையா என சீதா கேட்க அவருக்கு தெரியாது என்கிறார். இதற்கிடையில் செல்வம் முத்துவை போட்டு திட்டுகிறார்.

இதையும் படிங்க: குடியை நிறுத்திய அஜித்! அதற்கு காரணமே இவர்தானாம்.. என்ன ஒரு நட்புபா?

ஏன் இப்படி செஞ்ச எனக் கேட்க சிட்டியை உனக்காக தான் அடிச்சேன். ஆனால் சத்யாவை அடிச்சதே வேற விஷயம் என்கிறார். பின்னர் போட்டோ ஸ்டுடியோவில் எடுத்த வீடியோவை காட்ட செல்வம் அதிர்கிறார். இதை மீனாவிடம் கூற சொல்ல அவளுக்கு அது வலியை கொடுக்கும் என மறைத்துவிடுகிறார். வீடியோவை டெலிட் செய்ய சொல்ல ஆனால் செல்வம் ஆதாரம் இருக்கது நல்லது என தடுத்துவிடுகிறார்.

பின்னர் மீனா முத்துவுக்கு கால் செய்து சத்யாவுக்கு நடந்த விஷயத்தினை கூறுகிறார். நீங்க வாங்க என அழைக்க எனக்கு சவாரி இருப்பதாக கூறிவிடுகிறார். அப்போ என் தம்பியை விட சவாரி தான் முக்கியமா எனக் கேட்க என் தம்பிக்கு நடந்தாலும் சவாரி தான் முக்கியம் என்கிறார். நீங்க விஷயம் தெரிஞ்சதும் ஓடிவருவீங்கனு நினைச்சேன். 

சத்யா எப்படி இருக்கானு கூட கேட்க மாட்டிங்குறீங்க எனத் திட்டுகிறார். சும்மா கடுப்பேத்தாத மீனா நான் வர டைம் ஆகும். நீயே பாத்துக்கோ எனச் சொல்லிவிட்டு போனை வைப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: SK21 படத்துக்காக சிவகார்த்திகேயன் பட்ட பாடு!. படத்துல பாருங்க!.. ஜிம் டிரெய்னர் சொல்றத கேளுங்க!..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.