மாஸ்டர் மைண்ட் ரீட்டா பிரபா! முனீஸ்ராஜ் செய்த தில்லுமுல்லு வேலை.. கொந்தளித்த ராஜ்கிரண் மனைவி

Published on: February 14, 2024
raj
---Advertisement---

Actor Rajkiran: சமீபகாலமாக ராஜ்கிரண் மகள் மற்றும் அவரது கணவர் முனீஸ்ராஜுக்கு இடையே  இருக்க்கும் பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்றது. நான் தவறான முடிவு எடுத்துவிட்டதாகவும் அப்பாவிடம் சாரி கேட்டுக் கொள்கிறேன் என்றும் அழுது ஒரு வீடியோவை ராஜ்கிரண் மகள் பிரியா பகிர்ந்திருந்தார்.

ஆனால் உண்மையில் அவர்களுக்கிடையே என்னதான் பிரச்சினை என சரிவர தெரியாத நிலையில் மகள் பிரியா மற்றும் ராஜ்கிரண் மனைவி கதீஜா பேசிய ஒரு ஆடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த ஆடியோவில் இருந்து ஒரே ஒரு விஷயம் தெளிவாக தெரிகின்றது. அதாவது ராஜ்கிரண் அவருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் கம்பெனியை அவரது வளர்ப்பு மகளான பிரியா பேரில்தான் நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: பழைய மாவ அரைக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்களே… பாக்கியாவுக்கு ஆப்பு ரெடியாக்கிய கோபி…

அதனால் பணபரிவர்த்தனை எல்லாமே இன்றுவரை பிரியா பேரில் தான் நடந்து வருகின்றது. இதனால் வந்து ஒரு செக்கில் கையெழுத்து போடுமாறு பிரியாவிடம் தாய் கதீஜா கேட்டிருக்கிறார் போல. உடனே முனீஸ் ராஜ் ‘எவ்வளவு தொகை. எந்த பேங்க்’ என்றெல்லாம் துருவி துருவி கேட்டிருக்கிறார். இதிலிருந்து டென்ஷனான ராஜ்கிரண் மனைவி தன் மகளிடம் ‘உன்னை பணத்துக்காகவும் சொத்துக்காகவும்தான் அவர் திருமணம் செய்திருக்கிறார்’ என்று அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார்.

ஆனால் மகள் பிரியா நாளைக்கு இந்த செக்கால் எனக்கு எதுவும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே என் கணவர் அப்படி கேட்டிருக்கிறார் என கூறுகிறார். அதற்கு அவரது தாய் ‘ஏன்ம்மா பணத்தை போட்டதே நாங்கதானமா. அத எடுக்க உன் கையெழுத்து வேணும். இதுல அவர் யார் குறுக்க?’ என கேட்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்ததே முனீஸ்ராஜின் அக்கா ரீட்டாபிரபாவாம். இவர் கோயம்புத்தூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கிறாராம். ஒரு ஏட்டாக இருந்து கொண்டு ஏற்கனவே திருமணமான முனீஸ்ராஜுக்கு விவகாரத்து வாங்காமல் இரண்டாவதாக பிரியாவையும் திருமணம் செய்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’! இதே பெருமைக்குரிய அந்த கால பாடல் எதுனு தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணமும் செல்லாது என்றே சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிரியா மற்றும் கதீஜா பேசிய அந்த ஆடியோவால் முனீஸ்ராஜின் தில்லாலங்கடி வேலையும் வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது. பணத்திற்காகத்தான் பிரியாவை திருமணம் செய்திருப்பதாக அந்த ஆடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிவதாக சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.