தமிழ்சினிமாவில் கைகோர்த்த காதல் ஜோடிகள்… எப்படி சேர்ந்தாங்கன்னு பார்த்தா அதுதான் ஹைலைட்

Published on: February 14, 2024
Lovers day
---Advertisement---

இன்று பிப்ரவரி 14. காதலர் தினம். இன்றைய பொழுதை உலகம் முழுவதும் காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் காதல் இல்லாத இடமே இருக்க முடியாது. காற்று போல அது எங்கும் பரவி கிடக்கிறது. தமிழ்ப்பட உலகிலும் பல காதல் திருமணங்கள் நடந்துள்ளது.தமிழ்ப்பட உலகில் பல நடிகர், நடிகைகள் தங்களுக்குள் காதல் வயப்பட்டு வாழ்க்கையில் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களில் ஒரு சில ஜோடிகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ரஜினிகாந்த் – லதா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேட்டி எடுத்தவர் லதா. பேட்டி முடிந்ததுமே லதாவிடம், உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றாராம் ரஜினி. இதன்பிறகு இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்தது.

விஜய் – சங்கீதா

1999ல் விஜய், சங்கீதாவின் திருமணம் நடந்தது. 1996ல் விஜயின் படம் ஒன்றில் அவரது தீவிர ரசிகையாக விஜயை செட்டில் சந்தித்தார் சங்கீதா. அதன்பிறகு அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பல சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களது அன்னியோன்யமான காதலை உறுதி செய்தனர். தொடர்ந்து இரு குடும்பத்தினரும் ஒன்று கூடி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அஜீத் – ஷாலினி

தல அஜீத்தின் அட்டகாசமான படம் அமர்க்களம். இந்தப் படத்தோட தயாரிப்பின் போது தான் அஜீத், ஷாலினியின் காதல் மலர்ந்தது. இதனால் ஷாலினி படிப்பு பாதிக்குமே என்று படத்தில் நடிக்கப் பயந்தாராம். இருந்தாலும் படப்பிடிப்புக்குழு சூட்டிங்கால் அவரது படிப்புக்குத் தடை வராது என்றும் அது திட்டமிட்டபடி நடக்கும் என்றும் உறுதி அளித்தது. தொடர்ந்து அஜீத்தும் அதற்கு ஒத்துழைத்து அவரை நடிக்க வைத்தார். இதுவே அவர்களுக்குள் காதல் மலர காரணமாயிற்று.

சூர்யா-ஜோதிகா

surya jothika
surya jothika

ஆர்யா – சாயிஷா ஜோடி தமிழில் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தனர். இவர்களும் லவ் மேரேஜ் தான். 2019ல் நடந்தது. அதே போல சூர்யா-ஜோதிகா ஜோடி 2006ல் ஒன்று சேர்ந்தனர். இதற்கு முன்பு பல படங்களில் இணைந்து நடித்தனர். 99ல் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் தான் இவர்களது காதலுக்கு அஸ்திவாரம் போட்டது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.