Homelatest newsசிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!...

சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!…

Director Bharathiraja: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் பாரதிராஜா. அதுவரை குடும்ப பின்னணியை உறவுகளை மையப்படுத்தியே படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன.

ஆனால் பாரதிராஜா கிராமத்து வாசனை மிக்க படங்களோடு சிறந்த காதல் கதைகளையும் வித்தியாசமான முறையில் காட்டத் துவங்கினார். அவருடைய முதல் படமான 16 வயதினிலே திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இந்த சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார் பாரதிராஜா.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஹெலிகாப்டரை காட்டிய படம்! நூலிழையில் உயிர்தப்பிய சிவாஜி

இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். ஏராளமான படங்களில் தாத்தாவாக அப்பாவாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறார் பாரதிராஜா.

இந்த நிலையில் பாரதிராஜாவை பற்றிய ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது தன்னுடைய முதல் மரியாதை படத்தில்தான் சிவாஜி முதன் முதலில் மேக்கப் இல்லாமல் நடித்தார் என பாரதிராஜா சொன்னதாகவும் அந்த செய்தி தவறான செய்தி என்றும் திரை விமர்சகர் இதயக்கனி விஜயன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஒரே பாடலில் மூன்று வித ரசனை.. இன்றைய தலைமுறையும் கேட்க வேண்டிய அந்த காலப் பாடல்..!

முதல் மரியாதை படத்தில் சிவாஜி விக் அணிந்துகொண்டு, மேக்கப் போட்டு வர அதை பார்த்த பாரதிராஜா ‘மேக்கப்பும் வேண்டாம்… விக்கும் வேண்டாம்’ என சொன்னா. அவர் சொன்னபடியே நடித்தும் கொடுத்தார் சிவாஜி. ஆனால் இந்தப் படம் தான் முதன் முதலில் சிவாஜி மேக்கப் போடாமல் நடித்த படம் என்பது தவறு என விஜயன் கூறியிருக்கிறார்.

சினிமாவில் இத்தனை வருட காலம் இருந்தும் பாரதிராஜா இப்படி சொல்வது அழகல்ல என்றும் ஒரு வேளை முதல் மரியாதை படம் அவர் படம் என்பதால்தான் இப்படி சொல்கிறாரா என்றும் தெரியவில்லை எனவும் இதயக்கனி விஜயன் கூறினார். முதல் மரியாதை படத்திற்கு முன்பே சிவாஜி நெஞ்சிருக்கும் வரை படத்தில் மேக்கப் இல்லாமல்தான் நடித்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: அமராவதி படத்தில் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா? எஸ்.பி.பி கொடுத்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட அஜித்..!

அதை போல சிவந்த மண் படத்தின் ஒரு சில காட்சிகள் , பாடல் காட்சிகள் என வெளி நாடுகளில் படமாக்கப்பட்டதாம். அப்படி வெளி நாடுகளில் படமாக்கும் போது மட்டும் மேக்கப் போடாமல் நடித்தாராம் சிவாஜி.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments