Connect with us
Anitha

Cinema News

பிக்பாஸ் பாக்குற நீங்கதான் முட்டாள்! அப்பா இறந்தப்போ கூட விடல – அனிதா அனுபவித்த வேதனை

Anitha Sampath: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் அபிமானங்களை பெற்றவர் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே அனைவரும் அனிதா சம்பத்தை நன்கு அறிந்திருந்தனர். சொல்லப்போனால் க்யூட்டான சிரிப்புடன் அவர் செய்தி வாசிக்கும் முறை அனைவருக்கும் பிடித்திருந்தது. அப்பவே அனிதா சம்பத்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தார்கள்.

இதையும் படிங்க: லவ் செட் ஆகிடுச்சா?.. ரோஜா பூங்கொத்துடன் திரிஷா!.. காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் பாருங்க!..

அங்கு சம்பளம் மிகக் குறைவாக கொடுத்ததனால் எப்படியாவது தன்னை யார் என நிரூபிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அனிதா சம்பத். ஆனால் பிக்பாஸுக்குள் வந்த பிறகு ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளானார். நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்ற மனப்பாங்கிலேயே அனிதா இருந்ததினால் அவருடன் பேச உள்ளே இருந்த போட்டியாளர்கள் விரும்பவில்லை.

இருந்தாலும் 85 நாள்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருந்தார் அனிதா. இந்த நிலையில் மூன்று வருடத்திற்கு பிறகு தான் அனுபவித்த வலிகளை ஒரு தனியார் யூடியூப் சேனல் மூலமாக அனிதா பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சிறிது நாள்களில் அவருடைய அப்பா இறந்துவிட்டார். அந்த நேரத்தில் வந்த கமெண்ட்கள் அனிதாவை நிறைய பாதித்திருக்கிறது.

இதையும் படிங்க: ஏகே 63 அப்டேட் எல்லாம் வராது!.. இந்தா லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்.. வைரலாகும் அஜித், ஷாலினி ரொமான்ஸ் பிக்!

பிக்பாஸ் வீட்டில் நீ பேசிய பேச்சுக்கு இது வேணும் உனக்கு என அப்பா இறந்த சமயத்தில் கமெண்ட்கள் வந்திருக்கிறது அனிதாவுக்கு. காரணம் பிக்பாஸில் அனிதா நடந்து கொண்ட முறை. உள்ளே என்ன நடக்கிறது என யாருக்குமே தெரியாது. உள்ளே சண்டைப் போட்டவர்கள் வெளியே வந்து கும்மாளம் போடுவார்கள். உள்ளே ஒன்றாக இருந்தவர்கள் வெளியே வந்து சண்டை போடுவார்கள். பிக்பாஸ் பார்க்கிற நீங்கள்தான் முட்டாள் என அனிதா கமெண்ட் போட்டவர்களை கடுமையாக வசைப்பாடினார்.

அதுமட்டுமில்லாமல் அப்பா இறந்து மூன்று மாதத்திலேயே பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஆட அழைத்தார்களாம். எப்படி என்னால் வர முடியும்? என்று கூறியும் மிகவும் வற்புறுத்தி அழைக்க அதில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் ஆனார் அனிதா.

இதையும் படிங்க: லவ்வர்ஸ் டே அன்னைக்கும் லால் சலாமை சீண்டாத ரசிகர்கள்!.. மொய்தீன் பாய் மொத்த வசூல் இவ்வளவுதானா?..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top