
Cinema News
டிரைவர் திருமணத்திற்கு பணம் கொடுத்த ரஜினி!.. அதுல சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான் ஹைலைட்!..
Published on
By
நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் பேருந்து நடத்துனர் வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படித்தவர் ரஜினி. மாதம் 28 ரூபாய் வாடகையில் தங்கி இருந்தார். அதன்பின் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் மூன்று முடிச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். துவக்கத்தில் கமலுடன் இணைந்தே பல படங்களிலும் நடித்தார். ஆனால், ஒருகட்டத்தின் இனிமேல் நாம் இணைந்து நடிக்க வேண்டாம் என கமல் சொல்லிவிட ரஜினி தனியாக நடிக்க துவங்கினார். அங்குதான் அவரின் கேரியர் டேக் ஆப் ஆகியது.
இதையும் படிங்க: ஷூட்டிங் போய் தங்க இடமில்லாமல் மொட்டை மாடியில் தூங்கிய ரஜினி!.. நடந்தது இதுதான்!
பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் பல படங்களிலும் ஹீரோவாக நடித்து வசூல் மன்னனாக மாறினார். ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டார் பட்டமும் அவருக்கு கிடைத்தது. ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டமே இல்லை என்கிற நிலையையும் அவர் உருவாக்கினார்.
அதனால்தான், இத்தனை வருடங்கள் ஆகியும், 72 வயதிலும் அவரால் ஜெயிலர் எனும் மெகா ஹிட் படத்தை கொடுக்க முடிகிறது. இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
ரஜினி மற்றவர்களுக்கு உதவும் போது எப்படியெல்லாம் யோசிப்பார் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். 30 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அவரிடம் 2 டிரைவர்கள் வேலை பார்த்தார்கள். அதில் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட ரஜினியிடம் வந்து கல்யாண பத்திரிக்கை கொடுத்தார். உடனே அவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு செக் எழுதி கொடுத்தார் ரஜினி.
இதையும் படிங்க: ரஜினி கேட்ட சம்பளம்.. வாய்ப்பை வேறொரு நடிகருக்கு கொடுத்த இயக்குனர்! அப்படி என்ன கேட்டார்?
சில நாட்கள் கழித்து மற்றொரு டிரைவரும் அவரின் கல்யாண பத்திரிக்கையை கொடுக்க அவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு செக் எழுதி கொடுத்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் நடக்கும்போதும் ரஜினியின் நண்பர் உடன் இருந்தார். ரஜினியிடம் ‘இரண்டு டிரைவர்களுமே உங்களிடம் பல வருடங்களாக வேலை பார்க்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் 25 ஆயிரம். இன்னொருவருக்கு 50 ஆயிரம்.. என்ன காரணம்’ என கேட்டிருக்கிறார்.
அதற்கு ரஜினி ‘இப்போது பத்திரிக்கை கொடுத்தவரின் கல்யாணம் திருப்பதியில் நடக்கப்போகிறது. செலவு அதிகம். அதனால், 50 ஆயிரம் கொடுத்தேன். முதலில் பத்திரிக்கை கொடுத்தவரின் கல்யானம் சென்னையில் நடக்கிறது. 50 ஆயிரம் கொடுத்தால் எல்லாவற்றையும் திருமணத்திற்கு செலவு செய்துவிடுவார். அதனால், அவரிடம் 25 ஆயிரம் கொடுத்துவிட்டு, அவரின் வீட்டில் ரூ.25 ஆயிரம் கொடுத்துவிட்டேன். அது உங்களுக்கு தெரியாது’ என சொன்னாராம். ரஜினியின் இந்த விளக்கத்தை கேட்டு ஆச்சர்ய்யப்பட்டிருக்கிறார் அவரின் நண்பர்.
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...