விஜய் 69-ஐ இயக்கப்போவது அந்த இயக்குனரா?! என்னப்பா டிவிஸ்ட்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருக்கு!.

Published on: February 15, 2024
vijay
---Advertisement---

Thalapathy 69 : லியோ படத்திற்கு பின் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில்தான் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தபின் முழுநேரம் அரசியலில் இறங்கப்போவதாக சொல்லி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வருவதை அவரின் ரசிகர்கள் வரவேற்றாலும் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆனால், அரசியலில் எப்படியும் விஜய் தோல்வியை சந்திப்பார். கமலும் இப்படித்தான் சொன்னார். ஆனால், அரசியலில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் இல்லை என தெரிந்ததும் மீண்டும் சினிமாவுக்கு நடிக்கபோய்விட்டார். விஜயும் அப்படி மீண்டும் சினிமாவுக்கு வருவார் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: அஜித் காதலியை தனதாக்க ட்ரை செய்த சரத்குமார்… வெறுப்பேற்ற எப்படி இறங்கினார் தெரியுமா?

விஜய் இப்போது நடித்து வரும் கோட் திரைப்படம் அவரின் 68வது திரைப்படமாகும். எனவே, அடுத்து அவர் நடிக்கவுள்ள அவரின் 69வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஒருபக்கம் பல இயக்குனர்களின் பெயர் இதில் அடிபட்டு வருகிறது.

முதலில், கார்த்திக் சுப்பாராஜின் பெயர் அடிபட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதன்பின் வெற்றிமாறனின் பெயர் அடிபட்டது. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு விஜய்க்கு வெற்றிமாறன் கதை சொன்னது உண்மைதான். ஆனால், அவரின் இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: வளர்ப்பு அப்பாவாக மாறிய ராஜ்கிரண்.. கேட்ட ஒரே உதவியால் தூக்கி எறிந்த அஜித்… பாவமுங்க..

இப்போது தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் த்ரீ விக்ரம் சீனிவாஸ்தான் விஜயின் 69வது படத்தை இயக்கப்போகிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் மகேஷ்பாபு இயக்கத்தில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தின் இயக்குனர்தான் இந்த த்ரீ விக்ரம். தெலுங்கில் பல சூப்பட் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.

trivikram

இவரின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர்கள் கூட ஆசைப்படுவதுண்டு. இந்நிலையில்தான், விஜயுடன் இவர் இணையப்போவதாக செய்திகள் கசிந்துள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.