இனிமே கோலிவுட்டே இவங்க கையிலதான்! பேக் டூ பேக் ஹிட் கொடுத்து மாஸ் நடிகர்களை ஃபீஸ் ஆக்கிய ஹீரோக்கள்

Published on: February 16, 2024
kavin
---Advertisement---

Tamil Actors: இன்று தமிழ் சினிமாவில் கோலோச்சி இருக்கும் நடிகர்கள் மிகவும் பீக்கில் இருந்தாலும் அவர்களுக்குண்டான மாஸ் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டேதான் இருக்கின்றது. ஒரு பக்கம் அவர்களின் மார்கெட் உயர அவர்களுக்குண்டான சம்பளமும் பல கோடிகளில் உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

ரஜினி, கமல், அஜித், விஜய் , சூர்யா என இவர்களுக்குண்டான இன்றைய சம்பளம் கனவிலும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு ஏறிப் போயிருக்கின்றன. கதைகளில் கவனம் செலுத்துகிறார்களோ இல்லையோ ஆனால் சம்பள விஷயத்தில் படத்திற்கு படம் எகிறிக் கொண்டேதான் இருக்கின்றன. இன்னொரு பக்கம் ரசிகர்களும் அவர்கள் மனதில் இந்த நடிகர்களை தலைவனாக நினைத்து அதிக விலையில் டிக்கெட் கொடுத்து படங்களை பார்க்கவும் செல்கின்றனர்.

இதையும் படிங்க: விஜயின் முதல் படத்தை பாராட்டி நடிகர் திலகம் கொடுத்த அன்பளிப்பு!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

ஆனால் கடைசியில் கதை என்னவோ சுற்றி சுற்றி எடுத்த கதையாகவேதான் இருக்கும். இந்த நிலையில் சமீபகாலமாக கோலிவுட்டில் பல இளம் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகமாகியிருக்கின்றன. சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கதையில் ஜெயித்து விடுகின்றன.

அப்படி பல படங்கள் அண்மைக்காலமாக நம்மை மிகவும் கவர்ந்திருக்கின்றன. அதிலும் அந்தப் படங்களில் நடித்த ஹீரோக்களும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்களை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொண்டால் கோலிவுட்டின் தரமே மாறிவிடும் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காது!.. இது சைடு போஸ் இல்லடா.. சரியான போஸ்.. என ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

அந்த வகையில் மணிகண்டன் சமீபகாலமாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறார். குட் நைட் படத்திற்கு பிறகு மீண்டும் லவ்வர் படத்தின் மூலமும் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறார். அடுத்ததாக அசோக் செல்வன். இவரும் நல்ல சாராம்சம் உள்ள கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் மத்தியிலும் இவருக்கு என ஒரு தனி க்ரேஷே இருக்கிறது.

அடுத்ததாக கவின். டாடா, லிஃப்ட் போன்ற அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ஈர்க்கப்பட்ட நடிகராக மாறியிருக்கிறார் கவின். இவர்கள் வரிசையில் ஹரீஸ் கல்யாணும் இணைந்திருக்கிறார். கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் பெருமளவு வெற்றிப் பெற்றது. அதிலும் அவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது. கடைசியாக ரியோவையும் குறிப்பிடலாம். சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான ‘ஜோ’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: ஜெயம் ரவியின் சைரன் சத்தமா ஒலித்ததா? இல்லை சங்கு ஊதியதா?.. இதோ ட்விட்டர் விமர்சனம்!

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.