கலைஞரை எதிர்த்து சேரன் எடுத்த படம்! என்ன செய்தார் தெரியுமா கலைஞர்? ஒரு வருசத்திற்கு பொழப்பே போச்சு

Published on: February 16, 2024
cheran
---Advertisement---

Director Cheran: தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளை பற்றியும் சமூக சார்ந்த படங்களைப் பற்றியும் தன் படங்களின் மூலம் காட்டுவதில் சிறந்த இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் சேரன். இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் மக்களிடம் கவனம் ஈர்த்த படங்களாகவே மாறியிருக்கின்றன.

இயக்குனராக நல்ல அந்தஸ்தை பெற்ற சேரன் நடிகராகவும் களமிறங்கி ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார். இவர் ஹீரோவாக நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தவமாய் தவமிருந்து படமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: நம்ம ரஜினி மருமகளா இது?!.. நகைக்கடை பொம்மை போல ஜொலிக்கிறாரே!.. வைரல் புகைப்படங்கள்!..

இந்த நிலையில் இவரின் இயக்கத்தில் வெளியான ஒரு படத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடம் பட வாய்ப்பு இல்லாமல் சேரன் இருந்தாராம். அந்தப் படத்தின் பெயர் ‘தேசிய கீதம்’. முரளி நடிப்பில் வெளியான இந்தப் படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் கதைப்படி முதலமைச்சரையும் அவரது குடும்பத்தையும் கடத்தி ஏதோ ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்வது பற்றியது.

அரசியல் அமைப்பை சரி செய்ய ஒரு புரட்சிகர கிராமவாசியாக முரளி இந்தப் படத்தில் நடித்திருப்பார். படம் வெளியாகி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது கருணாநிதி ஆட்சியில் இருக்க அந்தப் படத்தை காங்கிரஸ் காரர்கள் கொண்டாடி தீர்த்தார்களாம். இவர்கள் கொண்டாட்டமே இது கலைஞருக்கு எதிரான படம் என்று மாறியிருக்கிறது.

இதையும் படிங்க: தங்கலான் கதை உருவானதன் சுவாரஸ்ய பின்னணி.. இந்த படத்தோடு மோதும் மற்றுமொரு பிரம்மாண்டம்!..

உடனே கலைஞர் சேரனை அழைத்து ஏன் இப்படி படம் எடுத்தீர்கள்? என்று கேட்டாராம். அதற்கு சேரன் ‘ஐயா நீங்கள் பராசக்தி படத்திலிருந்து சமூகம் சார்ந்த படங்களை கொடுத்திருக்கிறீர்கள். அரசாங்கத்திற்கு எதிராகவும் வசனம் எழுதியிருக்கிறீர்கள். அதை போலத்தான் நானும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அரசியல் திட்டங்கள் சரி வர மக்களுக்கு போய் சேரவில்லை. அது சம்பந்தமான ஒரு மனு மாதிரி இந்தப் படம்’ என்று சேரன் கலைஞரிடம் விளக்கியிருக்கிறார்.

இதை கேட்டதும் கலைஞர் ‘சரி போ’ என சொல்லி அனுப்பிவிட்டாராம். இருந்தாலும் இது பெரும் பிரச்சினையாகி கிட்டத்தட்ட ஒரு வருஷம் எனக்கு படமே வரவில்லை என சேரன் கூறினார்.

இதையும் படிங்க: சின்மயி சொன்ன பொய்யால் பல லட்சங்கள் நஷ்டம்… லியோவில் லோகேஷ் செஞ்சது தப்பு.. சீறி பாயும் பிரபலம்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.