Cinema History
காதலுக்காக மதம் மாறிய நாகேஷ்!… கல்யாணத்துக்கு அப்புறம் அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..
நாகேஷ் என்றால் ஒல்லியான தேகம்.. ஒடுக்கு விழுந்த கன்னம்.. குறும்பு கொக்களிக்கும் கண்கள் என்பதுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அவரை பார்த்தால் எல்லோருக்கும் பரிதாபம்தான் வரும். இதை வைத்துக்கொண்டு அவர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோது அவர் பட்ட அவமானங்கள் ஏராளம். ‘ உன் வீட்டில் கண்ணாடி இல்லையா?. இந்த முகத்தை வச்சிக்கிட்டு சினிமாவில் நடிக்கணும்னு ஆசையா?’ என பலரும் கேட்டு அவரை அசிங்கப்படுத்தினர்.
இந்தியன் ரயில்வே துறையில் கிளார்க்காக வேலை பார்த்துகொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். முதன் முதலில் ஒரு சினிமாவில் சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவசரப்பட்டு வேலையை விட்டுவிட்டார். அதன்பின் சரியான வாய்ப்பு இல்லாமலும், செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டார்.
இதையும் படிங்க: கொலைவழக்கில் சிக்கிய போதும் இயக்குனர் சொன்ன வார்த்தை!.. நெகிழ்ந்துபோன நாகேஷ்!..
அதன்பின் வாய்ப்புகள் கிடைத்து படிப்படியாக சினிமாவில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என 60களில் முன்னணி நடிகராக இருந்த பலரின் படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். நாகேஷின் டைமிங் சென்ஸ் இதுவரைக்கும் எந்த நடிகருக்கும் வந்தது இல்லை.
ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 5 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியான நடிகராக இருந்தார் நாகேஷ். திருவிளையாடல் தருமியையும், காதலிக்க நேரமில்லை செல்லப்பாவையும், தில்லானா மோகானம்பாள் வைத்தியையும், யாராலும் மறக்க முடியாது. காலங்கள் கடந்தும் பேசப்படும் காமெடிகள் அவரை.
இதையும் படிங்க: சினிமாவுக்கு வருவதற்கு முன் நாகேஷ் பார்த்த வேலை இதுதான்… இவருக்கு இப்படி ஒரு திறமையா?..
இவரின் முழுப்பெயர் செய்யார் கிருஷ்ணா நாகேஸ்வரன். சினிமாவுக்காக சுருக்கி நாகேஷ் என வைத்துகொண்டார். ஆனால், ஒரு சமயம் தனது பெயரை பீட்டர் நாகேஷ் என அவர் மாற்ற வேண்டியிருந்தது. அதற்கு காரணம் அவரின் காதல் திருமணம். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை நாகேஷ் காதலித்தார். ஆனால், அவர்களின் காதலை ரெஜினா வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், காதல் ஜோடி காதலில் உறுதியாக இருந்ததால் ஒரு கண்டிஷன் போட்டனர். நாகேஷ் மதம் மாற வேண்டும். நாகேஷும் அதை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பீட்டர் நாகேஷ் என மாற்றிக்கொண்டார். திருமணத்திற்கு பின் நாகேஷுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். அதில் ஒருவரை இந்து பெண்ணுக்கும், ஒருவரை முஸ்லீம் பெண்ணுக்கும் ஒருவரை கிறிஸ்துவ பெண்ணுக்கும் திருமணம் செய்து கொடுத்தார் நாகேஷ். காதலியை கரம்பிடிக்க மதம் மாறிய நாகேஷ் மனிதனுக்கு மதம் முக்கியமில்லை என்பதை தனது வாழ்வில் நிரூபித்து காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.