Cinema History
திடீரென சம்பளத்தை உயர்த்திய பிரபல பாடகி!.. எஸ்.ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்…
சினிமாவில் ஒருவருக்கு எப்படி வாய்ப்பு பறிபோகும்? எப்படி அது இன்னொருவருக்கு கிடைக்கும்? என சொல்லவும் முடியாது. கணிக்கவும் முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது சம்பந்தப்பட்டவர் அங்கே இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதேபோல், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் வளர முடியாது.
சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், இளையராஜா போன்ற பிரபலங்களுக்கு பின்னால் இருக்கும் வரலாறும் இதுதான். அப்படித்தான் பாடகர்கள், பாடகிகளுக்கும்தான். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டதால் அவருக்க சில மாதங்கள் காத்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்படித்தான் அவருக்கு ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை பாட வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: சொக்கி இழுக்கும் குரல் மூலம் நடிகைகளை மனதில் பதிய வைத்த எஸ்.ஜானகி!. அட இத்தனை பாடல்களா!..
50,60களில் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக இருந்தவர் பி.சுசிலா. அப்போது பிரபலமாக இருந்த பத்மினி, ஜெயலலிதா, சரோஜா தேவி, சாவித்ரி, தேவிகா என பலருமே தங்களுக்கு சுசிலா பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால், தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் சுசிலா. மலர்ந்தும் மலராத உள்ளிட்ட அவர் பாடிய பல பாடல்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.
சினிமாவை பொறுத்தவரை தன்னுடைய மதிப்பு அதிகரிக்கும்போது சம்பளத்தை உயர்த்துவது என்பது எல்லோரும் செய்வதுதான். அதுபோல, சுசிலாவும் தனது சம்பளத்தை கொஞ்சம் உயர்த்தினார். இது இயக்குனர் ஸ்ரீதருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட.
இதையும் படிங்க: ஒரே பாடலில் ஒட்டு மொத்த சேட்டைகளையும் செய்த ஜானகி… 80களில் தெறிக்கவிட்ட பாடல்..
அப்போது அவர் சுமைதாங்கி எனும் ஒரு படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா, முத்துராமன், நாகேஷ் என பலரும் நடித்து வந்தனர். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து வந்தார். அவரை அழைத்த ஸ்ரீதர் ‘இந்த படத்தில் சுசிலா பாடப்போவதில்லை. இந்த படத்தின் எல்லா பாடல்களையும் எஸ். ஜானகியை பாட வையுங்கள்’ என்றார்.
அப்போது வளரும் பாடகியாக எஸ்.ஜானகி இருந்தார். தூக்கு தூக்கி படத்தில் எல்லா பாடல்களையும் ஜானகி பாடினார். அந்த பாடல் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. இப்படித்தான் சிலருக்கு வாய்ப்புகள் திடீரென கிடைக்கும். அதன்பின் இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.